3,600 ஆண்டு பழமையான‌ கல்லறைகள் ?. எகிப்தில் கண்டுபிடிப்பு !

3600 Years Old Tombs found - Mummies Of Babies And Crocodiles Found Inside The Tomb Of Ancient Egypt

சுவீடனைச் சேர்ந்த‌ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழு எகிப்திலுள்ள‌ ஜிபெல் எல் சில்சிலா (Gebel el Silsila) எனுமிடத்தில் 3600 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதலைகள் மற்றும் குழந்தைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை கண்டுபிடித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்..

ஆராய்ச்சியாளர்கள், அடக்கம் செய்யப்பட்ட‌ உடல்களுக்கு படைக்கப்பட்ட‌ பரிசுகளுடன், பீங்கான் நாளங்கள் மற்றும் நகைகள் என‌ மற்ற‌ பொருட்களையும் கண்டுள்ளனர்.

லண்ட் பல்கலைக்கழக (Archaeologist group from Lund University) மரியா நில்சன் மற்றும் ஜான் வார்டு தலைமையிலான‌ தொல்லியல் நிபுணர் குழு மொத்த்மாக‌ 12 கல்லறைகளையும், பாறைகளில் வெட்டப்பட்டு மூன்று சிறு அறைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இத்தளம் நைல் நதி கரையோரத்தில் அஸ்வான் (Aswan) பகுதியிலிருந்து 65 கி.மீ வடக்கே உள்ளது. கதிரியக்க கார்பன் டேட்டிங் தரவு ஆதாரங்களின்படி (Radioactive Carbon Dating data) 3600 ஆண்டுகள் பழமையானது என அறியப்படுகிறது.

எகிப்தில் மிகப் புகழ் பெற்ற அரசர்களாக‌ விளங்கிய‌ மூன்றாம் தட்மோஸ் மற்றும் இரண்டாம் அமென்ஹோடாப் காலத்தின்போது இவை கட்டப்பட்டுள்ளன‌ என்றும், Gebel எல் சில்சிலாவின் 18வது அரச மரபினரின் காலத்தை ஒத்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன‌.

முன்னணி ஆராய்ச்சியாளர் ஜான் வார்டு , "பழமையான‌ இத்தலம் வணிகம், அரசியல் செயல்கள், மற்றும் வழிபாடுக்கென‌ முக்கிய மையமாக இருந்தது" என‌ கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட‌ 12 கல்லறைகளில், அடக்க பரிசுகள் மற்றும் தகனபலிகளும் கொண்ட இரண்டு கல்லறைகளும், மூன்று கல்லறைகளில் குழந்தைகள் அடக்கம் செய்யவும், மீதமுள்ளவற்றில் முதலைகள், செம்மறி, மற்றும் ஆடுகள் போன்ற பல விலங்குகலும் மம்மிக்களாய் அடக்கம் செய்யப்பட்டுள்ளன‌.

ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அர்ப்பணிக்கப்பட்டதாக‌ நம்பப்படுகிறது. என்றாலும், அந்த இடத்தில் ஏன் முதலைகள் வைக்கப்பட்டிருந்தன என‌ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் காரணம் வெளிப்படுத்தவில்லை. சில நிபுணர்கள் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வேண்டுமென்றே அங்கு வைக்கப்பட்டன என்றும் அல்லது அவை வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என‌ கூறுகின்றனர்.

ஒரே அறையில் பல்வேறு வயதுடைய‌ நபர்கள் புதைக்கப்பட்டிருந்தனர், ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என‌ நம்புகின்றனர்.

நாள் : 19.01.2017 திருத்தம் : 19.01.2017

புதியவை / Recent Articles