ice cream that doesn’t melt
Technology

Japanese scientists have created ice cream that doesn’t melt.

ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக்கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சியாளர்கள் ஐஸ் கிரீம் உருகிவிடாமல் அதன் உருவத்தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளனர். அறை வெப்பநிலைக்கு (room temperature) ஏற்ப மூன்று மணிநேரம் வரை உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதித்தும் பார்த்துவிட்டனர்.

பரிசோதனையில் ஹேர் டிரையர் மூலம் சூடான‌ காற்றினை வீசச் செய்த‌ போதும்கூட ஐஸ்கிரீம் உருகவில்லை. ஐந்து நிமிடம் சுடுகாற்று பட்டும் கூட‌ ஐஸ்கிரீம் உருமாற‌வில்லை. ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்ட‌ பாலிபினால் என்ற திரவம் காரணமாக‌ உருகவில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

ஸ்ட்ராபெர்ரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாலிபினோல் திரவத்துடன் ஐஸ்கிரீம் தயார் செய்யப்பட்டுள்ளது. பாலிபினோல், நீர் மற்றும் எண்ணெயை பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் தன்மையினை கொண்டுள்ளது. "என கனசவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான டோமிஹீசா குறிப்பிட்டார்.

இந்தவகை ஐஸ்கிரீம் சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி பிளேவர்களில் கிடைக்கின்றது.