வெளியிட்ட தேதி : 01.12.2016
ISS-international Space Station
அறிவியல்

NASA International Space Station visible in India; You can also see it only if You travel to Simla, Himachal Pradesh.

சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station / ISS) வெறும் கண்ணால் பார்த்தனர் சிம்லா மக்கள்.

உண்மைச் சம்பவம் : சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா தவிர உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பார்க்க‌ முடிந்தது. ISS, நவம்பர் 21 அன்று, இந்தியாவின் சிம்லாவில் (இமாச்சல் பிரதேசம் - Simla, Himachal Pradesh) அதன் முதல் தோற்றத்தினை அளித்தது. சிம்லாவின் மக்கள் தினசரி ISS நிலையத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியாவில் பார்க்க‌ முடிகின்ற‌ ஒரே இடம் சிம்லாதான்.

எனினும், ISS நிலையத்தை ஒரு நிமிடத்திற்குள்ளாகத் தான் பார்க்க‌ இயலும். முதலாவதாக‌, காலை 5.30 மணியளவில் ஒரு நிமிடத்திற்கும், மாலை 6:37மணி மற்றும் 7:06 மணிக்கு ஒரு நிமிடமும் தான் சிம்லா மக்களால் காண முடிந்தது. இரு தினங்களுக்கு முன்னர், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ISS தோற்றமளித்தபோது அங்கு வசிக்கும் ஒரு நபர் அதை பார்த்த உடனேயே வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் விட்டுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து காண முடிகின்ற‌ நேரத்தினை அறிய‌ நாசாவின் ஸ்பாட் த‌ ஸ்டேசன் (spotthestation.nasa.gov) வலைத்தளத்திற்குச் சென்று விபரத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணைய‌தளத்துக்கு சென்று நமது ஊரின் பெயர் மற்றும் பகுதியை டைப் செய்தால் விண்வெளி ஆராய்ச்சி மையம் நம்மிடத்திற்கு எப்போது வந்து செல்லும் என்ற விபரத்தினை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையம் 400 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது, மற்றும் விநாடிக்கு 8 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. அது ஒரு நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வருகிறது.

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் நாசாவை நோக்கிச்சென்ற‌ இந்திய‌ பயணிகளுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தினை ஒவ்வொரு நாளும், நமது இந்தியாவின் சிம்லாவிலேயே பார்க்க‌ முடியும் எனும் சேதியானது நல்ல செய்தியாக‌க்கூடும்.

ஆக‌, சிம்லாவுக்குப் போவோம். பிளான் பண்ணுவோம். சர்வதேச விண்வெளி நிலையத்தை நேராக கண்டு மகிழ்வோம். வீடியோவில் உள்ளதைப்போல‌, பார்ப்பதற்கு சிறு பறவைபோல் இருந்தாலும் நாமும் பார்த்தோம் என்பதைச் சொல்ல‌, நமது மொபைல் கேமராவில் ஒரு வீடியோவாவது எடுக்கலாமே?.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.