Electricity generation from human secretions
அறிவியல்

Human tears and saliva can generate electricity

'குறிப்பிட்ட மனித சுரப்பிகளால் சுரக்கப்படும் திரவங்களில் உள்ள‌ புரதமானது மின்சாரத்தினை உருவாக்குகின்றது (special protein that generates electricity). மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய வழியினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்: மனித உடலில் உள்ள‌ சுரப்பிகள் (Electricity generation from human secretions). ஆம். லைசோஸைம் (Lysozyme), எனும் திரவம் (புரதம் / protein ) சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகின்றது. இத்திரவத்தின் மீது அழுத்தம் பயன்படுத்தப்படும் போது மின்சாரம் உருவாகும். இது உடலின் உட்கிரகிக்கப்பட்ட (bodily implanted devices) சாதனங்களுக்குத் தேவைப்படும் எரிபொருளினை வழங்குகின்றது.

லைசோஸைம் (Lysozyme) புரதமானது கண்ணீர், உமிழ்நீர், பால், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவில் காணப்படுகின்றது. அதன் படிக வடிவில் (கிறிஸ்ட்டல்) மின்சக்தியை உருவாக்குகின்றன‌. அயர்லாந்தில் உள்ள Limerick / லிம்ரிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இம்முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிமுறையினைக் கண்டறிந்துள்ளனர்.

லைசோஸைம் புரதம் இரண்டு மெல்லிய கண்ணாடி ஸ்லைடுகளுக்கு (துண்டுகள்) இடையே அழுத்தப்பட்டபோது, அழுத்தம் மற்றும் அமுக்கத்தின் விளைவாக உருவாகக்கூடிய ச‌க்தியினால் அழுத்தமின் வகை (piezoelectricity) மின்சாரத்தினை உற்பத்தி செய்தது.

அழுத்த மின்சாரம் (piezoelectricity) நம்மைச் சுற்றி இருந்தாலும், குறிப்பிட்ட இந்த புரதத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இதுவரையிலும் கண்டிபிடிக்கப்ப‌டவில்லை என்பதுதான் உண்மை.