புளூட்டோவில் 500 மீட்டர் உயர இராட்சத பனிக்கோபுரங்கள்: நாசா கண்டுபிடித்தது

NASA discovered gigantic ice towers on Pluto includes towers standing 500 metres tall

இராட்சத பனிக்கோபுரங்கள் முதல் முறையாக பூமியைத் தவிர சூரிய மண்டலத்தில் வேறு எங்கும் கண்டறியப்படாத‌ அற்புத நிகழ்வாகும். புளூட்டோவில் பனி முகடுகளில் ஏற்பட‌ அதன் வளிமண்டலத்தில் உருவாகும் செயலாக்கங்கள் தான் காரணம் என‌ நாசா அடையாளம் கண்டுள்ளது.

இக்கோபுரங்களில் 500 மீட்டர்கள் உயரம் கொண்ட‌ கோபுரங்களும் அடங்கியுள்ளன‌ என‌ நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூ ஹரைசன்ஸ் அங்கு பனிக்கட்டிகளால் ஆன இராட்சத‌ கோபுரங்களை புகைப்படமாக்கி நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

கடினமான‌ பனி அல்லது பனிக்கட்டியாலான‌ அனைத்து கோபுரங்களும் சூரிய திசையில் சரிந்து காணப்படுகின்றதென்பது ஆச்சரியமான‌ விஷயமாக‌ உள்ளது. இதனைத் தொடர்ந்து புளூட்டோவில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் தொடர்பான‌ ஆய்வுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களையும் ஆராய்ச்சி செய்துவரும் நாசா, 2015 ல் அதன் வரலாற்று சிறப்புமிக்க‌ நியூ ஹரைசன்ஸ் (New Horizons) விண்கலத்தினை புளூட்டோவில் சென்றடையச்செய்து சாதனை படைத்தது. நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி (space probe) ஜனவரி 19, 2006 இல் பயணத்தினை துவங்கி சூரிய குடும்பம் முழுவதும் பிரயாணித்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழித்து ஜூலை 14,2015 அன்று புளூட்டோவின் மேற்பரப்பின் மீது பறக்கத் துவங்கியது. இது ஒரு தானியங்கி விண்ணுளவி ஆகும்.

நாள் : 10.01.2017 திருத்தம் : 10.01.2017

புதியவை / Recent Articles