வெள்ளை தாமரை மீதமர்ந்து

வெளியிட்ட தேதி : 14.10.2021

Vellai Thamarai Meethamarnthu

வெள்ளை தாமரை மீதமர்ந்து எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள் ‍பி. சுசீலா பாடல் தாயே கருமாரியம்மா ஆல்பத்தில் இருந்து. Vellai Thamarai Song lyrics from album Thaye Karumari Amma sung by P.Susheela - songs Tamil Lyrics

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை
பொங்கும் தமிழில் தேன் கவிதை
தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்
அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை
அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்
ஓசையில் உணரும் பாஷைகளை
பூமியில் என்றும் பேச வைத்தாள்
ஓம் ஓம் ஓம் ஓம்
அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை
அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்
ஓசையில் உணரும் பாஷைகளை
பூமியில் என்றும் பேச வைத்தாள்

மூட‌ நிலை கொண்ட காளிதாசரை
பாடிட வைத்த கலை அரசி
அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிட
நாவில் அமர்ந்த எழிலரசி
ஞானசம்பந்தர் மதுர கவிபாட
ஞான நிலை தந்த கல்யாணி
ஞானசம்பந்தர் மதுர கவிபாட
ஞான நிலை தந்த கல்யாணி
ஏழு சுவரங்களும் தாள லயங்களும்
போற்றி புகழ்கின்ற கலைவாணி
ஏழு சுவரங்களும் தாள லயங்களும்
போற்றி புகழ்கின்ற கலைவாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
பொங்கும் தமிழில் தேன் கவிதை
தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்
அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கருணையில் திகழும் கலைமகளே
கலியுகம் சிறந்திட வரம் தருவாள்
நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே
வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

கருணையில் திகழும் கலைமகளே
கலியுகம் சிறந்திட வரம் தருவாள்
நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே
வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

வீணை ஒலி சிந்த கான மழையினை
பொழிந்திடும் எங்கள் பூமகளே
கல்வி கடலென்று உன்புகழ் பாடிட
சிந்தையில் உறையும் நாமகளே
கால வரலாறு போற்றி புகழ்பாட
தாள லயம் தந்த அருள்வேணி
கால வரலாறு போற்றி புகழ்பாட
தாள லயம் தந்த அருள்வேணி
நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை
வாரி வழங்கிடும் அருள்வாணி
நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை
வாரி வழங்கிடும் அருள்வாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்
பொங்கும் தமிழில் தேன் கவிதை
தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்
அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து
எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.

மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!

உலகத் தத்துவ மந்திரமே உணர்த்தும் நாதா வாழ்வுக்கு

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை சித்தர் சிவவாக்கியர் பாடல்

என்ன வரம் கேட்பேன் நானே

யப்பா... யப்பா... ஐயப்பா கண்ணுல காச காட்டப்பா

ஸ்ரீ துர்க்கை அம்மன் 108 சரண மாலை

ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி மந்திரம்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

சரஸ்வதி 108 போற்றி

108 சிவபெருமான் போற்றி

108 முருகர் போற்றி

108 விநாயகர் போற்றி

35 காயத்ரி மந்திரங்கள், 35 கடவுள்களின் அருள் பெறும் மந்திரங்கள்

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே

திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.