கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே சரஸ்வதி தேவி (கலைவாணி) பாடல் வரிகள். Kalaivani nin Karunai Thein mazhaiye Saraswathi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே (2)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் (x2)
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் (x2)
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் (x2)
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! (கலைவாணி நின் கருணை)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் (x2)
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் (x2)
வானகம் வையகம் உன் புகழ் பாடும் (x2)
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம் (கலைவாணி நின் கருணை)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! (கலைவாணி நின் கருணை)
உங்கள் கருத்து : comment