ஸ்ரீ ருத்ரம் மந்திரம்

ஸ்ரீருத்ரம் நமகம் சமகம் ஸ்லோகங்கள் முழுவதும் : ஸ்ரீ ருத்ரம் - Sri Rudram - Mantras for wealth - செல்வ வள மந்திரங்கள். யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். நமகம் (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); சமகம் (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); லகுந்யாசம் (தன்னை ஸ்ரீருத்ர வடிவான சிவனாகவே தியானம் செய்தல்; ஸ்ரீமகாந்நியாசம் (தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), சிவ அஷ்டோத்திரம், ருத்ர விதான பூஜை, ருத்ர திரிசதீ செய்தல் அடங்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், நமக்கு வேண்டாதவற்றை நீக்கவும் பிரார்த்தனையும், பதினோராவது அனுவாகத்தில் ருத்ர கணங்களுக்கு நமஸ்காரமும் கூறப்படுகிறது. முதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை லகு ருத்ரம் என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை மகா ருத்ரம் என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு அதி ருத்ரம் ஆகும். Sri rudra is the most renowned sukta (hymn) of vedas.

உங்கள் கருத்து : comment