வெளியிட்ட தேதி : 27.03.2014
சமூகம்

Bharathiya Janatha Party, BJP

பாரதிய ஜனதா கட்சி (இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா.ஜ.க) இந்திய அரசியலின் இருபெரும் கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்று.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை ஆட்சி புரிந்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனது முழு ஐந்து வருட ஆட்சி காலத்தையும் பூர்த்தி செய்தது இதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி அடைந்தது. திரு. நரேந்திர‌ மோடி அவர்கள் பிரதமராக‌ அறிவிக்கப்பட்டார். தமிழகத்தில் கன்னியாக்குமரியில் பா.ஜ‌.க‌ வெற்றி பெற்றது. கன்னியாக்குமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் வேட்பாளராக‌ நின்று வெற்றி பெற்றார்.

வரலாறு

ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார்.

முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக மாறியது.1984 மக்களவைத் தேர்தலில் பா ஜ கவுக்கு 3 இடங்களே கிடைத்தன. லால் கிருஷ்ண‌ அத்வானி அவர்கள் கட்சியின் தலைவரானார்.

1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா ஜ க 85 தொகுதிகளில் வென்றது.

1991ல் அது 119 ஆக உயர்ந்தது.

1996ல் பா ஜ க மிக அதிக பட்சமாக 187 தொகுதிகளை வென்றது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார்

பிறகு 1998 ல் மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை அ தி முக ஆதரவை விலக்கிக் கொண்டதால் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.

1999 ல் பா ஜ கவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசமைத்தது. இம்முறை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

2014 மக்களவைத் தேர்தல்: பா ஜ கவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்..

இணையதளம் : http://www.bjp.org/

ஆதாரம் : http://bjptn.org/join-bjp/

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.