வெளியிட்ட தேதி : 22.02.2014
மக்கள்

Thillaiyaadi Valli ammai

தில்லையாடி வள்ளியம்மை இந்திய விடுதலைப் போராட்ட பெண் வீராங்கனை ஆவார். இவர் 22.2.1898 அன்று தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியில்எ முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் ஒரு கூலித் தொழிலாளியாக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.

1913-ஆம் ஆண்டு தென்னாப்பிரிவிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார் வள்ளியம்மை. 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி ரத்தான பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார். பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வள்ளியம்மை அவர்கள் தனது பதினாறாவது வயதில் பெப்ரவரி 2, 1914ல் உயிர்நீத்தார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.