Thenar Mozhimaanal thannai sereer mayaltheereer Muthuthandavar Keerthanai
இராகம்- நாதநாமக்கிரியை-ஏகதாளம்
பல்லவி
தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர்
அனுபல்லவி
மானார் கரனே யம்பல வாணா பணிபூணா (தேனார்)
சரணங்கள்
அளகமதுசரிய முகமலர்வளை நெரியக் களபமுலை புளகமெழக்
கலவி செய்யத் தருணம், வளமைபெறுமக்கு மாலிகைமார் பாவதி
ரூபா, களமார் விடவூணா தில்லைக் கனகசபைவாணா (தேனார்)
அன்னை தான் வசை பேசவே துணையான மாதருமேசவே, கன்
னன் மாமதனெய்யவே மலர்க்கையிற் கங்கணந்தொங்கவே, எ
ன்னதான் செய்வாள் சொல்லீர் மயலெளிதல்லவே நில்லீர், மன்
னு சுந்தரர் தூதா தில்லை மன்றுளாடிய பாதா (தேனார்)
சந்தனஞ்சுடுதென்பள் மனந்தகைத்தால் பகையென்பள் அந்
தியுந் தணலென்பளொரு வல்லு நூறுகமென்பவள், கொந்தார்
கொன்றைத்தாமா நறுங்கோதை யம்பிகைவாமா இந்திரன் றிரு
மாலயன்றொழுமீசா நடராசா (தேனார்)
Thenar Mozhimaanal thannai sereer mayaltheereer Muthuthandavar Keerthanai
தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர் கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்றப்பட்டது.
உங்கள் கருத்து : comment