திருத்தணி மலையினிலே திருநாளாம்

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் -'பத்மஸ்ரீ' யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thiruthani malaiyinile thirunaalam thirupugazh paadidum perunalam song lyrics by K J Yesudas Songs - Lord Murugan Devotional songs Tamil Lyrics

திருத்தணி மலையினிலே திருநாளாம்
திருப்புகழ் பாடிடும் பெருநாளாம்

திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம்
தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி)

ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து
பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார்
சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே
திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான்
காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை
நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி)

தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே
கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர
தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க
கனிவுடன் வேண்டியதை கந்தனும் அருளிடுவான்
சித்திரையின் பௌர்ணமியில் முழுமதி வானில்லவர
சாந்தமுடன் முருகனும் காட்சிதருவான் (திருத்தணி)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.