பச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா

வெளியிட்ட தேதி : 01.12.2016

பச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா - முருகன் பாடல் / ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Pachai Mayil Vaahanane Shiva Balasubramanyane Vaa - Murugan Songs / Ayyappan Bhajan song Tamil Lyrics

பச்சை மயில் வாகனனே - சிவ
பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
---- பச்சை

கொச்சை மொழியானாலும் - உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா - எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
---- பச்சை
நெஞ்சமதில் கோயில் அமைத்து - அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே - வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
---- பச்சை
வெள்ளம் அது பள்ளந்தனிலே - பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே - ‍‍ நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் - எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
---- பச்சை
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே ---- பச்சை

அலைகடல் ஓரத்திலே - என்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனம் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே - சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
---- பச்சை

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.