முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே முன்னின்று காக்கும் இறைவனுக்கே முருகன் பாடல் வரிகள் : பூவை செங்குட்டுவன். Muthal Vanakkam Engal Iraivanukke Sung By Sirkazhi Govindarajan - Murugan Devotional Song lyrics
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)
சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!
(முதல்)
உங்கள் கருத்து : comment