முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? முருகன் பாடல் வரிகள் : தமிழ்நம்பி. Muruga Endru Azhaikava Muthuk kumara endru azhaikava Sung By T.M.Soundararajan TM Soundarrajan - Murugan Devotional Song lyrics
முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன்?
உன்னை எங்கு காண்பேன்?
ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது - நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா - அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா - உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க - நீ
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா - நீ
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா - முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
உங்கள் கருத்து : comment