குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகன் பாடல் வரிகள். Kundrellaam Kumara Un Idamallava Murugan Devotional Song Tamil lyrics.
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா (குன்றெல்லாம் )
முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
முருகா முருகா முருகா முருகா
பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
சிரகிரிவேலவன் சன்னிதியே
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே
அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
தேடினார் முருகனை கவசம் பாடி
ஆடினார் காவடி உன் பாதம் நாடி
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
(முருகா சரணம்)
(குன்றெல்லாம் )
முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி
சென்னிமலை மகிமை அற்புதங்கன்
அவை சொல்லி மாளாத அதிசயங்கள்
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்
(முருகா சரணம்)
(குன்றெல்லாம் )