கந்தன் காலடியை வணங்கினால்

வெளியிட்ட தேதி : 04.12.2017

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள்.Thiruparankundrathil Nee Sirithal Muruga - Kandhan Karunai fim song lyrics - Lord Murugan Devotional songs Tamil Lyrics. Movie | Thiruvarul | Sung By T.M.Soundararajan | Music | Kunnakudi Vaidhyanathan

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை)

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் (கந்தன் காலடியை)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.