வெளியிட்ட தேதி : 03.01.2014

கார்த்திக்கும், பிரேம்ஜியும் கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். இவ்வேளையில், அக்கம்பெனி பெங்களூரில் புதிதாக துவங்க இருக்கும் கிளை திறப்பு விழாவுக்காக இருவரும் பெங்களூருக்கு பயணமாகிறார்கள். இரவு நேரமாகிவிட‌, ஒரு இடத்தில் நிறுத்தி பிரியாணி சாப்பிடும் போது, மாண்டி தக்கரைப் பார்க்கிறார்கள்.

அவரது அழைப்பின்பேரில் எல்லோரும் சேர்ந்து சரக்கடிக்க ஓட்டலுக்குப் போகிறார்கள். விடிய விடிய குடித்து கும்மாளமிடுகின்றனர். காலையில் கண்விழித்தால் கார்த்தி மட்டும் எங்கோ அத்துவான காட்டில் நிற்கிறார். பிரேம்ஜியை காணோம். ஓட்டல் அறையிலேயே அவரை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று எண்ணி, ஓட்டலுக்கு திரும்புகிறார். ஆனால், அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைக்கிறது. அறை முழுவதும் ரத்தக்கறையுடன் நாசர் படுகொலை செய்யப்பட்டு கிடக்க, அவருக்கருகே பிரேம்ஜி படுத்திருப்பதை கண்டு மேலும் திடுக்கிடுகிறார். அந்த அறையில் இருந்த தக்கரையும் காணவில்லை. உடனடியாக பிரேம்ஜியை எழுப்பி, இருவரும் அவசர அவசரமாக அங்கிருந்து தப்பிகக்க‌ வெளியேறுகின்றனர்.

அப்போது அங்கே வரும் போலீசார் இருவரையும் கைது செய்கினறனர். இருவரும் போலீசை அடித்து துவைத்து அங்கிருந்து தப்பிக்கிறார்கள். பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொலை பழியில் சிக்கும் இவர்கள் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார்கள். இந்த கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

பிரியாணி திரைப்பட முன்னோட்டம்

Biriyani Movie Trailer by kollytalk

இந்தப் படத்தில் தன் வேடம் என்னவோ அதை உணர்ந்து அந்த அளவுக்கு மட்டும் நடிப்பைத் தந்திருக்கிறார் கார்த்தி. அவரது முக பாவங்கள், உடல் மொழி இந்தப் படத்தில் சிறப்பாக உள்ளது. காதலியிடம் தன்னை நல்லவனாகக் காட்ட பிரேம்ஜியை மாட்டிவிடும் காட்சிகளில் காமெடி சிரிப்பலைகள்.

படம் முழுக்க நிறைந்திருக்கிறார் பிரேம்ஜி. முந்தைய படங்களைப் போல, எந்த பஞ்ச் வசனமும் இல்லை. ஆனாலும் அப்பாவியாக சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக செய்திருக்கிறார். நண்பனுக்காக எதையும் சந்திக்க தயாராகும் போது, தன்னாலும் உருக்கமாக நடிக்க முடியும் என்று காட்டுகிறார்.

ஹன்சிகாவுக்கு படத்தில் பெரிதாக நடிக்கு வாய்ப்பு எதுவும் இல்லை. அழகு பொம்மையாக வந்து டூயட் பாடி சென்றுள்ளார்.
ராம்கியும், தன் நடிப்பால் கவர்கிறார். கவர்கிறார்கள். மாண்டி தக்கர் கவர்ச்சியின் எல்லைக்கே போயிருக்கிறார். நாசர், பிரேம், சம்பத் தங்கள் நடிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
யுவனின் பின்னணி இசை படத்துக்கு பலம். அந்த மிஸிஸிப்பி பாடலில் கலக்கியிருக்கிறார். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு கலர் கொடுத்திருக்கிறது.
கதை இருக்கிறதோ இல்லையோ.. பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதில் கில்லாடி வெங்கட் பிரபு.

ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை மசாலாக்களையும் இந்தப் படத்திலும் சரியாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முதல் பாதி இன்றும் விறுவிறுப்பாக‌ அமைந்திருக்கலாமோ, அப்படியானால் பிரியாணி இன்னும் சுவையாக வந்திருக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.