reserve-bank-of-india-release-rs-2000-currency-note
பணம் முதலீடு

Look Indias new 500 and 2000 Rupee notes. Reserve Bank of India to issue Rs 2,000 notes soon

இந்திய‌ அரசாங்கத்தின் அதிரடியான‌ அறிவிப்பிற்கு பின் ரூபாய். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை மக்கள் பரிமாற்றிக்கொள்ள‌ பயப்படுகின்றனர். மக்களுக்கு இனிமை தரும் செய்தி என்னவென்றால் ரூ .2,000 நாணயத் தாள்கள் ஏற்கனவே ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு விரைவில் புழக்கத்தில் வர‌ உள்ளது என்பதாகும்..

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve bank of India, RBI), ரூ .2,000 நாணயத் தாள்கள் அதிக‌ அளவில் புழக்கத்தில் (come into circulation) வர உள்ளதால், உயர் இலக்க மதிப்புகள் கொண்ட‌ (high-value denominations) நோட்டுகள் தவிர்க்கப்பட்டால்தான் கறுப்பு பணம் (Black Money) தடுத்து நிறுத்தப்படும் என்பது நிபுணர்களின் கருத்து.

இந்த‌ புது நோட்டுக்களை அச்சிடும் (New currency notes are printed at) இந்திய‌ ரிசர்வங்கியின் மைசூர் நாணய அச்சிடும் வசதியில் (Mysuru currency printing facility) பணி நிறைவடைந்துள்ளன.

நாணயத் தாள்கள் மற்றும் நாணயங்கள் (Currency notes and coins) எட்டு யூனிட்களில் அடித்தல் / அச்சிடப்படுகின்றன‌. இந்த‌ யூனிட்கள் அனைத்தும் பாதுகாப்பு அச்சிடுதல், அடித்தல் கார்ப்பரேஷன் (Security Printing and Minting Corporation of India Limited / SPMCIL) ஆன‌ இந்திய‌ நிதி அமைச்சகத்திற்கு சொந்தமானதாகும்.

துளிகள்

இந்திய‌ ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டதும், எப்போதுமே உயரிய‌ மதிப்பு கொண்ட‌ நாணயத்தாள் ( (Indian currency with high-value denominations ever printed by reserve bank was Rs.10,000) ரூபாய் 10,000 (பத்தாயிரம்) த்திற்கான‌ நோட்டாகும். பத்தாயிரம் ரூபாய் தாள்கள் ரிசர்வ் வங்கியால் 1938 மற்றும் 1954 ஆம் வருடங்களில் வெளியிடப்பட்டு புழக்கத்திற்கு வந்தன‌. 1946ஆம் ஆண்டிலும், மீண்டும் 1978 வது ஆண்டிலும் நிறுத்தப்பட்டு திரும்பப்பெற்றுக்கொண்டது.

புதிய நாணயத் தாள்கள் ம‌காத்மா காந்தி தொடர் வங்கி தாள்களில் (Mahatma Gandhi Series of bank notes) இடம் பெறுகின்றன‌. இந்த‌ 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் முன்பக்கம் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய 500 ரூபாய் நோட்டின் பின்புறத்திலேயே 400 ஆண்டு பழமையானதும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமுமான‌ (UNESCO World Heritage Center) புது தில்லியின் செங்கோட்டை படம் (Image of Redfort, New Delhi) உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி படி, இதன் நிறம் "கல் சாம்பல்" வண்ணத்தில் (sand grey) உள்ளது.

மெஜந்தா (கருநீலம்) நிற‌ 2,000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில், இந்தியாவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் (Indian Mars Orbiter) வெற்றிகரமாக‌ ஏவப்பட்ட‌ மங்கள்யான்
(image of the Mangalyaan satellite) செயற்கைக்கோளின் ப‌டம் உள்ளது.

இரண்டு நாணயத் தாள்களின் (500 & 2000) இடது மற்றும் வலது பக்கத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ (help vision impaired), உயர்த்தப்பட்ட அச்சு (raised prints) மற்றும் கோடுகளை கொண்டுள்ளன‌.

மேலும் இவை ஸ்வச் பாரத் (தூய்மையான‌ இந்தியா) சின்னத்தினை ("Swachh Bharat,” or “Clean India” logo) கொண்டிருக்கும்.