வெளியிட்ட தேதி : 25.11.2016
Toll-Gate-Tamil-Nadu
பணம் முதலீடு

Commuters can use MobiKwik wallet to pay road tolls at 391 booths

MobiKwik (மொபிக்கிவிக்) வாலட்: இப்போது இந்திய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள‌ 391 சுங்கச்சாவடிகளில் (road tolls) பணம் செலுத்த பயன்படுத்திக்கொள்ள‌ முடியும். MobiKwik (மொபிக்கிவிக்) நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து (National Highways Authority of India (NHAI) ) இந்த‌ பணமில்லாமல் கட்டணம் செலுத்தும் (cashless payment) முறைக்காக‌ ஒப்புதல் பெற்றுள்ளது.

ரூ 500, ரூ 1000 ரூபாய் தாள்கள் செல்லாப்பணம் ஆக்கப்பட்டதனால், டிசம்பர் 2-ம் தேதி வரையிலும், NHAI ஆணையத்தால் இந்திய நெடுஞ்சாலைகள் முழுவதுமான‌ அனைத்து கட்டணங்களும் இரத்து செய்யப்பட்டபின்னர் இந்த‌ நீக்கமானது நிகழ்ந்துள்ளது. டிஜிட்டல் வாலட் (digital wallet) வழியாக‌ சுங்கவரியைக் (pay highway tolls) ஆணையத்திற்கு செலுத்த‌ அங்கீகாரம் பெற்ற‌ முதல் மொபைல் பணப்பை (வாலட்/wallet) அல்ல MobiKwik (Toll Gate payment) என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். Paytm நிறுவனம், பயணிகளுக்காக‌ நாடு முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் (toll plazas) நெடுஞ்சாலை வரிகள் செலுத்த அனுமதிக்கும் என்று முன்னரே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MobiKwik பயனர்கள், ஆப்பினை (MobiKwik Mobile App) டவுண்லோடு செய்து இன்ஸ்டால் (Download and Install) செய்யவேண்டும். இந்த‌ பயன்பாட்டினை / ஆப்பினை உபயோகித்து சுங்கச் சாவடிகளில் காணப்படும் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் (scan QR codes) செய்துகொள்ள‌ வேண்டும்.

ஸ்கேனிங் செய்த் பிறகு, MobiKwik பயன்பாடு லேன் எண் (lane number) மற்றும் சுங்க மையத்தின் பெயரையும் (name of the toll plaza) காண்பிக்கும். இதன் பின் பயனர் தங்கள் வாகனத்தின் எண் ( vehicle number) மற்றும் செலுத்தப்பட‌ வேடிய‌ பணம் ஆகியவற்றை டைப் செய்து பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம் (பணம் செலுத்தலாம்).

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.