வெளியிட்ட தேதி : 28.11.2016
ICICI Bank Entrance
பணம் முதலீடு

ICICI Bank to make 100 villages cashless in 3 months and adopts digital mode transactions.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பினையடுத்து, நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), 100 கிராமங்களில் பணமில்லாமல் கொடுப்பனவுகள் செய்ய டிஜிட்டல் முறைகளை (cashless and digital modes of payment) 100 நாட்களுக்குள் பின்பற்ற உள்ளது. இதற்காக‌ வங்கி டிஜிட்டல் முறை பரிவர்த்தனை குறித்து 10,000 கிராம வாசிகளுக்கு பயிற்சி அளிக்கும். மேலும் அவர்களுக்கு தொழில்முறை பயிற்சியும் வழங்க உள்ளது.

வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் ( CEO Chanda Kochhar) கூறுகையில் "அது சபர்கந்தா மாவட்டத்தின் அகோதரா (Akodara in Sabarkantha district) கிராமத்தில் டிஜிட்டல் மயம் செய்வதில் பெற்ற‌ வெற்றியானது இச்செயல் புரிய‌ ஊக்கம் அளித்துள்ளது" என்று கூறினார்.

அகோதராவில், பால் கூட்டுறவு சங்கம் (milk cooperative society) மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு, அளவீடு, கண்காணிப்பு மற்றும் கட்டணம் தீர்வுகளை வங்கி உருவாக்கியுள்ளது. 250 குடும்பங்கள் இக்கிராமத்தில் உள்ளன‌. மொத்தமாக‌ உள்ள‌ 1,191 வங்கிக் கணக்குகளில் 1,036 பெரியவர்களுக்கான‌ சேமிப்பு கணக்குகள் (Adult savings accounts) உள்ளன‌,

- இந்த கிராமங்களில் வாழும் பெரியவர்கள் டேப்லட்டுகள் மூலம் ஆதார் சார்ந்த விபரங்களை (Aadhaar-based eKYC) பயன்படுத்தி வங்கி கணக்குகளைத் திறந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மற்றும் யுஎஸ்எஸ்டி மொபைல் பயன்பாடு (SMS and USSD mobile app) மூலம் சில்லறை விற்பனை கடைகளில் பணமில்லாமல் கொடுப்பனவுகளைச் (make cashless payments) செய்யவும் முடியும்.

- SMS வங்கியியல் பயன்பாடுகள்/ஆப் (SMS banking app) பிராந்திய மொழிகளில் (உள்ளூர் மொழி / regional languages) கிடைக்கும் மற்றும் ஃபீட்சர் போன்களில் (feature phones) இது செயல்படும். வங்கி வணிகர் உட்கட்டமைப்பு வசதிகளை (merchant infrastructure) அமைத்து மொபைல் அடிப்படையிலான கொடுப்பனவுகளை (accept mobile based payments in retail shops) கிராமத்தில் உள்ள சில்லறை கடைகளிலும் செயல்படுத்த அனுமதிக்கும்.

- பணமில்லா பரிமாற்றங்கள் செய்வதற்கு (cashless transactions) விதை மற்றும் உர விற்பனையகங்களில் Point-of-Sale (POS) இயந்திரங்களை அமைத்துக் கொள்ளும்.

- ஐசிஐசிஐ வங்கி சுய உதவிக் குழுக்களை (Self Help Groups (SHGs) உருவாக்கம் செய்யவும் மற்றும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கவும் செய்யும். மேலும், ஐசிஐசிஐ வங்கி, பயிற்சியளிக்கப்பட்ட‌ கிராமவாசிகளுக்கு நீட்டித்த‌ கடன் வசதிகளை கிசான் கடன் அட்டைகள் (Kisan credit cards) வழியாக‌ வழங்கும். இருசக்கர வாகன‌ கடன்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் கடன்களும் (two wheeler loans and farm equipment loans ) வழங்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.