வெளியிட்ட தேதி : 17.12.2016
Lucky draw rewards on digital mode payments
பணம் முதலீடு

Lucky draw rewards announced by India Govt. on digital mode payments. Lucky Grahak Yojana, Digi-dhan Vyapar Yojana are the two programmes

வியாபாரிகள் மற்றும் குடிமக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக‌ அதிர்ஷ்ட சீட்டெடுப்பினை அறிவித்தது இந்திய‌ அரசு. அரசு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கென‌ இரண்டு பண வெகுமதி வழங்கும் அதிர்ஷ்ட‌ தேர்ந்தெடுப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு தொழில் புரிபவர்களை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த‌ வைப்பதே இந்த‌ திட்டத்தின் பிரத்யேகமான சிறப்பாம்ச‌மாகும்.

இரு திட்டங்கள் ஆவன‌

லக்கி கிரஹக் யோஜனா (Lucky Grahak Yojana)


தினசரி பண வெகுமதியாக‌ (daily reward) நுகர்வோருக்கு தலா ரூ 1000 வீதம், 100 நாட்களில், 15,000 மக்களுக்கு கொடுக்கப்படும்.

யு.பி.ஐ, யுஎஸ்எஸ்டி, ஆதார் இயக்கப்பட்ட பேமெண்ட் சிஸ்டம் (AEPS) மற்றும் RuPay அட்டைகள் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு (who use digital payments modes such as UPI, USSD, Aadhaar Enabled Payment System (AEPS) and RuPay Cards), ரூ 1 லட்சம், ரூ .10,000 மற்றும் ரூ .5,000 போன்ற வாராந்திர பரிசும் உள்ளது.

தற்பொழுது, அரசாங்கம், தனியார் கடன் அட்டைகள் (விசா, மாஸ்டர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவை) மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இதில் செல்லாது. இரு பரிசுகளுமே அதிர்ஷ்ட தேர்ந்தெடுப்பின் ( lucky draw) பின்னரே அறிவிக்கப்படும்.

டிஜி-தன் வியாபார் யோஜனா (Digi-dhan Vyapar Yojana)


வியாபாரிகளுக்கான‌ வாராந்திர பரிசுத் தொகைகள் ரூ .50,000, ரூ .5,000 மற்றும் ரூ .2,500. பரிசுகள் அதிர்ஷ்ட தேர்ந்தெடுப்பு முறையில் ( lucky draw) தெரிவிக்கப்படும்.

இதைத்தவிர, அரசாங்கம் ஏப்ரல் 14 ம் தேதியன்று ஒரு மெகா சீட்டெடுப்பினை வழங்க‌ உள்ளது. இதில் ரூ.1 கோடி, 50 லட்சம், 50 இலட்சம் மதிப்புள்ள பரிசுகள் உல்ளன‌. 8 நவம்பர், 2016 மற்றும் 13 ஏப்ரல், 2017 இடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யும் நுகர்வோர்களுக்கு இந்த‌ அதிர்ஷ்ட‌ காற்று வீசும். அதுபோல‌ வியாபாரிகளுக்கு, 50 இலட்சம் 25 லட்சம், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் உண்டு.


இந்த‌ பரிசுகள் அனைத்தும் குறைவான‌ மதிப்பிலுள்ள‌ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே. ரூ .50 மற்றும் ரூ. 3000 வரம்பிற்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள‌ வேண்டும்.

வெற்றியாளர்கள், தகுதிவாய்ந்த‌ பரிவர்த்தனைகளின் ID க்களை வைத்து ஒரு சீரற்ற சீட்டிழுப்பின் மூலம் அடையாளங்காணப்படுவர் (winners identified through a random draw of the eligible Transaction IDs ). NPCI ஆல் உருவாக்கப்பட்ட‌ ஒரு சிறப்பான‌ மென்பொருள் இதற்காக‌ பயன்படுத்தப்படும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.