பணம் முதலீடு

image credit : UberUber to launch self-driving cabs this month ,in Pittsburgh

உபர் (Uber) தானியங்கி கார்கள் இந்தியாவில் அல்ல‌, பிட்ஸ்பர்க் (in Pittsburgh) நகரில் அறிமுகம். பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ( car manufacturers) ம‌ற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (tech companies), டெஸ்லா, கூகுள், போர்டு (Ford) மற்றும் பி.எம்.டபிள்யூ (BMW), வெகு சீக்கிரமே தானியங்கி வாகன (autonomous vehicles) சேவைகளை தொடங்குவதற்கான‌ தங்களது திட்டங்களை குறித்து அறிவித்துள்ளதை கேள்வி பட்டிருப்போம். ஆனால் உபர் (Uber) இந்த‌ நிறுவனங்கள் எல்லாவற்றையும் விட‌ முன்னதாகவே, நுகர்வோருக்கு சுய ஓட்டுநர் தொழில்நுட்ப வாகனங்களை (self-driving technology) கொண்டுவருவதில் முந்திவிடும்.

உபர் (Uber) இம்மாத பிற்பகுதியில் பிட்ஸ்பர்க் (in Pittsburgh) நகரிலுள்ள‌ தனது வோல்வோ XC90 SUV க்களின் (Volvo XC90 SUVs) 100-வாகன அணியில் இருந்து சில‌ எண்ணிக்கையிலான வாகனங்களை சுய ஓட்டுநர் வாகனங்களாக‌ (modified self-driving) மாற்றம் செய்து அறிமுகப்படுத்த உள்ளது.

பிட்ஸ்பர்க் ல் உள்ள பயணிகளுக்கு இந்த வாகனங்கள் ஒதுக்கப்படும், மற்றும் அவர்களிடம் இப்பயணத்திற்கான‌ கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்ப‌ட மாட்டாது. ஆனால் பயணிகள் பின் சீட்டில் அமர்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு காரும் பின்னால் ஒரு மனித மேற்பார்வையாளரை கொண்டிருக்கும்.

மேலும் ஒவ்வொரு பயணம் பற்றிய‌ குறிப்புகளை எடுக்க முன் பயணிகள் இருக்கையில் ஒரு இணை பைலட் அமர்ந்திருப்பார். ஒவ்வொரு காரிலும் பின் சீட்டில் ஒரு டேப்லட் இணைக்கப்பட்டிருக்கும். பயணிகள், ஒரு தன்னாட்சி வாகனத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்றும் தற்போதைய திட்டம் குறித்து விளக்கமளிக்கவும் இந்த‌ டேப்லட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் : ப்ளூம்பெர்க் அறிக்கை

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.