பணம் முதலீடு

New premium of life insurers rises up 51%

New insurance premium rises up 51%

The new life insurance premium collection rose by over 51 % and reached Rs 7,972.54 crore in April this year. The public insurance company LIC stated a rise of 64 per cent in new business premium at Rs 5,877.95 crore during the 2016 April month and in April 2015, it collected Rs 3,581.96 crore.

Among private insurance companies, SBI Life's first year premium rose to Rs 432.06, 143 per cent higher. HDFC Standard Life premium increased by 8 per cent to Rs 302.37 crore. ICICI Prudential Life increased 20.5 per cent at Rs 277.96 crore and Birla Sun Life, the business premium up 72.7 per cent from 53.11 crore year ago.

நடப்பு நிதி ஆண்டின் (2016) முதல் மாதத்தில் (ஏப்ரல்) ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 51 சதவீதம் உயர்ந்துள்ளது. க‌டந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் ரூ.5,268 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.7,973 கோடியாக அதிகரித்துள்ளது. 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள், தனியார் நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரலில் ரூ.1,686 கோடியாக இருந்த வருவாய் இவ்வாண்டில் ரூ.2,095 கோடியாக அதிகரித்துள்ளது

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் (Life Insurance corporation of India) பிரீமிய வருவாய் 64 சதவீதமாக‌ உயர்ந்து ரூ.5,878 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ரூ.3,582 கோடி பிரிமிய வருவாயினை எல்.ஐ.சி ஈட்டி இருந்தது.

இந்த‌ வளர்ச்சியினால் இந்திய மக்கள் மத்தியில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மேலும் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு , தொழிலகங்கள், விபத்து போன்ற இடர்பாடுகளுக்கு எதிராக மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக காப்பீட்டு வசதி பெற‌ வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு வருகிறது.

ஆதாரம் எக்ணாமிக் டைம்ஸ் பக்கம்
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.