Samsung's Flexible OLED display fold-able phone
Gadgets

Samsung hopes foldable phones by 2018

சாம்சங் 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மடிக்கக்கூடிய‌ (fold-able smart phone) அறிமுகப்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. இந்த‌ கைபேசியானது மடித்து வைத்துக்கொள்ளும் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட‌ இந்த‌ ஃபோன் ஆனது கேலக்ஸி நோட் வரிசையில் கீழ் வெளியிடப்பட‌ உள்ளது.

சாம்சங் அதன் திட்டங்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசிய‌ சம்பவம் இதுவே முதல் தடவையாகும், பல ஆண்டுகளாக இத்தர‌ ஃபோன் குறித்த‌ வெளியீட்டுச் செய்தி வ‌தந்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருந்தன‌. சாம்சங் 2012 ல் மடிக்கக்கூடிய‌ (bendable AMOLED display) டிஸ்பிளே ஃபோனின் முன்மாதிரியை (prototype fold-able Samsung galaxy note phone) வெளியிட்டிருந்தது. சாம்சங் கடந்த ஆண்டு, இவ்வகை (மடிக்கக்கூடிய‌) கைபேசிக்கான‌ காப்புரிமைக்கும் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் ஃபோன் கைப்பேசி உலகில் புரட்சிகள் பலவற்றை நிகழ்த்தி வரும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசிக்கான‌ அறிவித்தலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இத்தருணத்தில் குறித்த கைப்பேசி எப்போது சந்தைக்கு வருகின்றது எனும் மற்றுமொரு தகவலையும் தந்துள்ளது. இதன்படி 2018 ஆம் ஆண்டில் ம‌டிக்கக்கூடிய‌ (fold-able Samsung galaxy note smart phone) கைப்பேசியானது விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சாம்சங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது எனபதுதான் பிரதானம் மற்றும் இந்த‌ புதிய கைப்பேசியின் சிறப்பம்சங்கள் குறித்த‌ தகவல்களையும் சாம்சங் நிறுவனம் (Samsung Company) விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE