Realme 3 Smartphones
கைபேசி

Realme claims 210,000 Realme 3 units sold in a day

இந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. சுமார் 1.5 லட்சம் ஃபோன்கள் சில நிமிடங்களில் விற்றுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மீ நிறுவனம் realme 3 இரக ஸ்மார்ட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 3 ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என்றும், 4 ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999 என்றும் விற்பனை செய்யப்பட்டது.

Huawei-Mate-X-foldable-phone-4-dimension

ரியல்மீ ஃபோங்கள் சாதனை

ரியல்மீ நிறுவனத்திற்கு இத்தகைய விற்பனை என்பது புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னர் 370,000 ரியல்மீ 2 (Realme 2) ஸ்மார்ட்போன்களை இரண்டே நாட்களில் விற்பனையாக்கியுள்ளது ரியல்மீ .

பின்னர் realme 3 ஸ்மார்ட்போன்கள் நேற்று மதியம் 12 மணி முதல் ஆன்லைன் வழி ஃபிளாஷ் விற்பனை (Online flash sale) துவங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவுற்றது. அதில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் விற்பனை அமோக வரவேற்பினை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனை அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதல் மீண்டும் விற்பனைக்கு வந்தது. மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மட்டுமே இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில், சுமார் 2,10,000 realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.