நோக்கியா தனது முதல் அண்ட்ராய்டு கைபேசியுடன் ஸ்மார்ட்போன் அரங்கில் மீண்டும் நுழைகிறது

Nokia re-enters the smartphone market with its first and new Android handset - NOKIA 6

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நோக்கியா தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்னை அறிமுகப்படுத்தி அதன் ரசிகர்களின் நீண்டநாள் பிரார்த்தனைக்கு பதில் அளித்துள்ளது. என்றாலும் அநேகமாக நோக்கியாவின் (நோக்கியா ஓஎஸ்) உண்மை ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துமா?.

HMD Global பற்றி

HMD Global Oy, "நோக்கியா" பிராண்ட் பெயரில் மொபைல் சாதனங்களை உருவாக்கு ஒரு பின்னிஷ் (பின்லாந்து சார்) நிறுவனம் ஆகும். மே 2016 மைக்ரோசாப்ட் மொபைல் கைபேசி வணிகத்தின் ஒரு பகுதியை வாங்கிய‌ பின்னர் உருவாக்கப்பட்டதாகும். மைக்ரோசாப்ட்க்குப் பின்னர் நோக்கியா மொபைல் போன்களை வணிக ரீதியா உருவாக்கம் செய்யும் உரிமம் பெற்றது.

மொபைல் ஃபோன் சரித்திரத்தில் பிரம்மாண்ட‌ பெயர் பெற்ற‌ பிராண்டான‌ "நோக்கியா" பின்லாந்தை சார்ந்த‌ HMD குளோபல் (HMD Global) எனும் புதிய‌ உரிமையாளருக்கு இப்போது சொந்தமாகிறது. HMD குளோபல் நிறுவனத்தினால், 5.5-அங்குல ஒற்றை அலுமினிய பாடியுடன் (unibody), 2.5D உயரம்பெற்ற‌ கண்ணாடி( “2.5D” contoured glass front.) மற்றும் அண்ட்ராய்டு 7.0 Nougat சார்ந்து இயங்குகின்ற‌ Nokia 6 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6 ஃபோனில், ஒரு 1080p டிஸ்பிளே (1080p display), ஸ்னாப் டிராகான் 430 செயலி (பிராசஸர் / Snapdragon 430 processor), 4GB ரேம் மற்றும் 64GB உள் சேமிப்பு, அதே போல் , இயல்பான‌ ஆம்ஸ் ஐ விட சத்தத்தை வெளியிடுவதற்கு இரட்டை ஆம்ப்ளிஃபைர் (பெருக்கிகள்) மற்றும் டால்பி (Dolby Atmos) அட்மோஸ் சேர்க்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 கைபேசி, 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் முன் 8 மெகாபிக்சல் செல்ஃபீ கேமராவுடன் (8Mp selfie camera) வருகிறது.

உயரிய‌ மேம்பட்ட வன்பொருள் அல்ல என்றாலும், நோக்கியாவின் மொபைல் விதிவிலக்கான பேட்டரி ஆயுள் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனை வழங்கும் ( exceptional battery life and graphics performance) என்று வாக்களிக்கின்றது. நோக்கியா 6 விற்பனையானது இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரத்தியேகமாக சீனாவில் 1699 CNY சீன‌ யென்னுக்கு (சுமார் $250 டாலர் / ரூ.17 ஆயிரம்) விற்பனையாக‌ உள்ளது.

நாள் : 10.01.2017 திருத்தம் : 10.01.2017

புதியவை / Recent Articles

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE