NOKIA 8 Price revealed
Gadgets

Nokia 8 Price in India Revealed before launch

நோக்கியா 8 (Nokia 8 android smartphone) செவ்வாயன்று வெளியிடுவதற்கு முன் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வியானது அதன் விலையாகும், ஆனால் இந்த‌ மர்மம் அவிழ்க்கப்பட்டது.

நோக்கியா நிறுவனத்தின் அன்ட்ராய்டு ஃபோன் தொடரில் ஒன்றான Nokia 8 ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் வருகின்ற‌ அக்டோபர் 14ம் திய‌தி இந்தியாவில் அறிமுகம் என‌ தெரிவிக்கப்பட்டது. நோக்கியா 8 ஃபோன் இந்தியாவில் வெளியீட்டுக்கென‌ ஒதுக்கப்பட்ட‌ நேரம் 11:30 மணியாகும் (புது டெல்லியில்). ஆனால் அமேசான் இணையதளம் நோக்கியா 8 ஃபோன் விலையினை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்ஃபோனின் (smartphone) விலை ரூ. 36.999.

5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசி Snapdragon 835 Processor கொண்டு ஆற்றலூட்டப்பட்டது.மேலும் பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் மற்றும் microSD கார்ட் மூலம் 256GB டேட்டா ஸ்டோரேஜ் (data storage) என‌ அதிகரித்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

கூகுள் அண்ட்ராய்டின் புதிய பதிப்பான‌ Android 7.1 Nougat இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேம‌ரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கேம‌ரா (video calling camera) ஆகியவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது.இதன் விலையானது இந்திய ரூபாவில் 36,999 ஆகவும், 565 டாலர்களாகவும் இருக்கின்றது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE