JioPhone2 Specifications
Gadgets

JioPhone 2 goes on sale tomorrow

ரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்குமென‌ அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.இதன்படி ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு ஜியோ போன் 2 இன் அதிரடி விற்பனைத் துவங்குகிறது. Jio.com வலைத்தளம் மற்றும் MyJio ஆப் பயன்படுத்தி உங்களுக்கான ஜியோ போன் 2 ஐ வாங்கிக் கொள்ளலாம். புதிய ஜியோ ஃபோன் 2 கிவெர்ட்டி கீபேட் வசதியுடன் வாட்ஸ் அப், யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற கைப்பேசி செயலிகளுடன் (mobile App) விற்பனைக்கு வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டத்தின் போது புதிய ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.2,999 எனவும் அனைத்து ஜியோ கடைகள் மற்றும் ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ ஆப்பிலும் (MyJio App) கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

JioPhone ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இத்துடன் அதிரடி ஆஃபர் ஒன்றினையும் பயனர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன்படி, வாடிக்கையாளர்கள் யாதொரு நிறுவனத் தயாரிப்பில் உள்ள‌ உங்களது பழைய மொபைல் ஃபோன்களைக் கொடுத்து, வெறும் ரூ.501 செலுத்தி ஜியோவின் புதிய மொபை போனை பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோ போன் 2 குறிப்பு விபரங்கள் (JioPhone2 Specifications)

- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே
- 2 மெகா பிக்சல் பின்புற‌ கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி - எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி

விலை : ரூ.2,999

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE