வெளியிட்ட தேதி : 01.12.2016
Reliance-Jio-customers-will-get-extended-benefits
கைபேசி

All New and existing Reliance Jio customers will get extended benefits till 31 March 2017

ஜியோ வெல்கம் ஆஃபரை (Reliance Jio -RJio) மார்ச் 2017 வரை நீட்டித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். தற்போது, அனைத்து பயனர்களுக்கும் இந்த‌ சலுகையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாய் ரிலையன்ஸ் சிம் அட்டைகளை (Reliance Jio SIM cards) வாங்கிக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் 31, 2017 வரை இலவச 4G டேட்டா (free 4G data நாள் ஒன்றுக்கு 1GB வரை), இலவச குரல் / வீடியோ அழைப்புகள் (free voice/video calls), ஜியோ ஆப்/ப‌யன்பாடுகளை அணுகுதல் போன்றவற்றை இலவசமாகப் பெறலாம் என‌ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் (Reliance Industries Ltd) தலைவர் முகேஷ் அம்பானி இன்று தெரிவித்துள்ளார். இதை ரிலையன்ஸ் ஜியோவின் ட்விட்டர் (RJio Twitter Tweets) பதிவிலும் உறுதி செய்யப்பட்டதைக் காணலாம்.

ஏற்கனவே இருக்கும் Jio பயனர்களுக்குத் தானாகவே இந்த‌ சலுகை நீட்டிக்கப்பட்டு பயன்பெறுவர். 4ஜி டேட்டா பயன்பாடு 1GBக்கு மேலானால், வேகம் 128 Kbps கீழே கட்டுப்படுத்தப்படும்.

பயனர்கள் 1GB டேட்டா வரம்பை தீர்த்துவிட்டால் அவர்கள் ஆன்லைனில் ஜியோ மணி வாலட் பயன்பாடு வழியாகவோ, அருகிலிருக்கும் கடைகள், ஜியோ ஸ்டோர்களிலோ அல்லது விநியோகஸ்தர்களிடமிருந்தோ ரீசார்ஜ் செய்துகொள்ள‌ முடியும்.

ஜியோ கட்டணங்கள் இப்போது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கென‌ தனித்தனியாக புதுப்பிக்கப்பட்டுள்ளன‌ (separately for prepaid and postpaid customers).
கட்டண‌ விபரங்கள் அறிய‌ கிளிக் செய்யவும்

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.