Jio 4G Feature Phone
Gadgets

Reliance Jio 4G VoLTE Feature Phone Specifications

ஜியோ ஃபோனுக்கான (Jio Phone) முன்பதிவு ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா முழுதும் பல‌ வாடிக்கையாளர்கள் ஜியோ ஃபீச்சர் போனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பதிவின் முதல் நாளிலேயே ரிலையன்ஸ் ஜியோ அதன் வலைத்தளத்தில் ஜியோ ஃபோனின் ( Jio Phone ) முழுமையான விவரங்களை வெளியிட்டுள்ளது.

ரிலையன்சின் புதிய‌ ஜியோ ஃபோண் ஆனது முழுக்க முழுக்க‌ 2ஜி ஃபோன் பயன்படுத்துபவர்களை தனது ஜியோ நெட்வர்க்கில் சேர்க்கும் நோக்கமே. ஜியோ 4ஜி ஃபீச்சர் ஃபோனை நீங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம், என்றாலும் நீங்கள் திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக‌ ரூ. 1,500 செலுத்தியாக‌ வேண்டும்.

சிறப்பம்சம்

ஜியோ கைபேசி ஸ்ப்ரெட்ட்ரோம் டுயல் கோர் ப்ராசசர் (Spreadtrum dual-core processor) கொண்டது


பேட்டரியானது 12 மணி நேர பேச்சு நேரத்தினை வழங்குகிறது


4ஜிபியில் இருந்து microSD அட்டை வழியாக சேமிப்பு திறனை விரிவு படுத்தலாம் (128 ஜிபி வரை)

இணைப்புக்கள் தேர்வு : 4G VoLTE, Bluetooth v4.1, Wi-Fi, NFC, FM Radio, GPS, and USB 2.0 support.

ஜியோ ஃபோனில் அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மீர், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் உருது போன்ற மொழிகள் இடம்பெற்றுள்ளது.

Jio ஃபோன் பெட்டியில்‍ : கைபேசி, தனி பேட்டரி (removable battery), சார்ஜர் அடாப்டர், விரைவு சேவை வழிகாட்டி (quick service guide), உத்தரவாத அட்டை (warranty card,), மற்றும் சிம் அட்டை (SIM card) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். JioCinema, JioMusic, JioTV மற்றும் JioXpressNews போன்ற பிரபலமான உடனடி செய்தி மற்றும் சமூக நெட்வொர்க்கிங் பயன்பாடுகளுடன் ஜியோ ஃபோன் வருகிறது. ஜியோ போனில் பேக்கில் (புது ஃபோன் பெட்டி) இணைக்கப்பட்டுள்ள கேபிள் வசதியுடன் டிவியையும் இணைத்து வீடியோக்களையும் பார்க்கலாம்.

ஜியோ ஃபோன் முழு விபரங்கள்

டிஸ்பிளே (Display)
2.40 இஞ்ச்
பிராஸசர் (Processor)
1.2GHz dual-core
பாட்டரி (Battery capacity)
2000mAh battery
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
KAI OS
ரெஸ‌லூஷன் (Resolution)
240x320 pixels
றேம் (RAM)
512MB
Storage
4GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
2 மெகா பிக்சல் (2 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
0.3 மெகா பிக்சல் (0.3 Mega Pixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE