iPhone 8 models
Gadgets

iPhone 8 launch rumour: Apple to launch iPhone8 alongside iPhone 7s and iPhone 7s Plus in 2017

ஆப்பிள் அடுத்த ஆண்டு இரண்டு ஐபோன் 7s கைபேசிகளை வெளியிட உள்ளது. இது இந்த ஆண்டு வெளியான ஐபோன் 7 மாதிரிகள் போன்றவை. மற்றும் ஆப்பிள் மூன்று புதிய ஐபோன்களை அடுத்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

வெளியான தகவலின்படி, D20, D21, மற்றும் D22 உட்பட மூன்று வேறுபட்ட ஐபோன் மாதிரிகள் குறிப்பிடப்படுகிறது. cன்Bஎட படி, D20 மற்றும் D21 ஐபோன்கள், தற்போதைய ஐஃபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஃபோன்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் என்றும் இவை ஐஃபோன் 7s மற்றும் ஐபோன் 7s பிளஸ் என்ற பெயரில் வெளியாக உள்ளன எனவும் தெரியவருகிறது.

சுவாரஸ்யமாக, சீன தளம் ஒன்றில் (Weibo), ஆப்பிள் அதிக அளவிலான சந்தை பங்கு பெறுவதற்காக ஐபோன் 7ச் தொடரின் விலையினை குறைக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

பரபரப்பாக பேசப்படும் D22 மாதிரி, ஃபெராரி என அப்பிள் வளாகத்தினுள் முணுமுணுக்கப்படுகிறது. ஆப்பிள் தனக்குச் சொந்தமான தானியங்கி காரினை உருவாக்கி வருகிறது. இதுதான் Fஎரர்ரி எனப்படுகிறது. என்றாலும் மற்றொரு தகவலின்படி D22 என்பது ஃபோணான ஐஃபோன் 8 வெர்ஷனைச் சுட்டுகிறது.

ஐஃபோன் 8 கைப்பேசியானது புதிய வடிவமைப்புடன், a bezel-less AMOLED screen. / தொடு திரையுடன் அறிமுகமாகும் என முன்னர் கிடைத்த தகவல் போலவே வெளியாக உள்ளது.

ஐபோன் 8 எவ்வளவு பெரியதாக இருக்கும் என தெளிவாக இல்லை, ஆனால் அதன் டிஸ்பிளே ஆனது தற்போதைய ஐபோன்களைக் காட்டிலும் பெரியதாகவும், வளைந்த தொடுதிரையினைக் (நெகிழ்திரை) கொண்டதாகவும் இருக்கக் கூடும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE