வெளியிட்ட தேதி : 29.11.2016
lake-dropped-iPhone4
கைபேசி

Now Book an Uber Cab through web (mobile browsers) across India Uber without mobile app.

நீங்கள் தற்செயலாக உங்களது ஐபோனை (iPhone) நீரில் தவறி விட்டுவிட்டால் ???. அவ்வளவுதான் உங்கள் ஐபோன் கோவிந்தா! என்று எண்ணிக்கொள்ள‌ வேண்டியது தான் . இது ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போன்களுக்கு முன் வெளிவந்த ஐபோன்களுக்கு பொருந்தும். ஏனெனில் இவை நீர் எதிர்ப்பு திறன் கொண்ட‌ போன்கள் அல்ல‌. ( iPhone before the 7 and 7 Plus is not water resistant, however, some cases can make your phone water resistant.)

ஆனால் ஆச்சரியம். அமெரிக்காவின் பென்சில்வனியா (Pennsylvania) மாகாணத்தில், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம், மிக்கேல் குன்ட்ரூம் (Michael Guntrum) என்பவர் பனி உறைந்த‌ ஏரியில் (ice frozen lake) மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தனது ஐபோன் 4ஐ (iPhone4) தவறி ஏரியில் போட்டுள்ளார். அவர் மீண்டும் அவரது ஐபோன் கிடைக்கும் என நினைக்கவில்லை. அவரது காலால் ஃபோனை தடுக்க‌ முயற்சித்தும், அது வழுக்கி பனி ஓட்டை வழியாக‌ ஏரியினுள் விழுந்துள்ளது. அதை அவரால் மீட்க முடியவில்லை என்று மிக்கேல் கூறியுள்ளார்.

-25 டிகிரிக்கும் குறைவான காலநிலையில் நானும், எனது நண்பனும் உறைபனி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிந்தோம். அப்பொழுதுதான் எனது ஐபோன் கை நழுவி விழுந்துவிட்டது . ஒரு வருடத்திற்கும் மேல் நாளாகிவிட்ட நிலையில் அந்த ஐபோன் வேறொருவர் கையில் சிக்கியுள்ளது எனவும், டானியெல் கார்கென் (Daniel Kalgren) என்பவர் தான் தனது போனை கண்டுபிடித்துள்ளார் எனவும் மிக்கேல் கூறியுள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரான டேனியல் வழக்கமாக‌ மீன்பிடிக்கும் ஏரி வற்றிப்போனதால், காலியான‌ ஏரியில் புதையல் வேட்டை செய்வதற்கு டேனியலைத் தூண்டியது.
டானியெல் அவருடைய metal detectorஐ பயன்படுத்திய போது களிமண்ணுடன் புரண்டிருந்த‌ இந்த ஐபோனை 6 ஆடி ஆழத்தில் கண்டுபிடித்துள்ளார். அதை அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று சுத்தம் செய்து அதை 2 நாட்கள் அரிசியில் வைத்துள்ளார். பின்னர் அதை சார்ஜிங் செய்துள்ளார். அற்புதமாக அந்த‌ ஐபோன் ஆன் ஆகியது. அதில் போனின் உரிமையாளரின் நம்பரைப் பார்த்து அவரிடம் திருப்பிக் கொடுக்க உதவியது எனவும் கூறியுள்ளார்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.