ஹானர் 5சி அம்சங்கள் உங்களையும் வாங்கத் தூண்டும்!!

Huawei Honor 5c smart mobile phones features, Tamil

ஹூவாய் நிறுவனம் புதிய‌ ஸ்மார்ட்ஃபோன் ஹானர் 5சி (Huawei Honor 5c smart mobile phone) என்ற‌ ப‌ட்ஜெட் கருவியை அறிமுகம் செய்திருப்பது அனைவரும் அறிந்ததே. உயர்ந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஹானர் 5சி விலை ரூ.10,999 மட்டுமே. குறைந்த‌ விலையில் பல‌ சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளதால் இந்தக் கருவி பலரையும் கவர்ந்திருக்கின்றது. இந்தக் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் 16nm ஹைசிலிகான் கிரின் 650 சிப்செட் (Hisilicon Kirin 650, 16nm chipset) இந்தக் கருவியின் மிக முக்கிய அம்சமாக இருக்கின்றது.

இதுமட்டுமின்றி ஹானர் 5சி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கருவியின் சில அம்சங்கள் :

01

மெலிது (Lightweight)

ஏர்கிராஃப்ட்-கிரேடு அலுமினியம் (Aircraft-grade Aluminium) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஹானர் 5சி ஃபோன் கையில் கச்சிதமாக பொருந்துவதோடு எடையும் குறைவாகவே இருக்கின்றது.


02

ஃபுல் ஹச்டி (Full HD IPS screen)

5.2 இஞ்ச் ஃபுஎல் எச்டி ஐபிஎஸ் திரை (Full HD IPS screen) மற்றும் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டதால் படம் மற்றும் வீடியோக்களை உயர்தரத்தில் ர‌சிக்க முடியும்.


03

மல்டி டாஸ்கிங் (Multi-Tasking)

ஹானர் 5சி கருவியின் முக்கிய அம்சமாக சிப்செட் விளங்குகின்றது. இதிலுள்ள‌ 16nm ஹைசிலிகான் கிரின் 650 சிப்செட் (Hisilicon Kirin 650, 16nm chipset), 1.7GHz (octa-core) அக்டா கோர் சி்பியு இரகமாகும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரை (qualcomm snapdragon) விடத் திறனுடையதாகும்.


04

மெமரி (Memory)

2ஜிபி ரேம் (2GB RAM) மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியை தவிர மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது..


05

சிறந்த‌ கேமரா (camera)

ஹானர் 5சி , 13 எம்பி முதன்மை கேமரா (13MP Primary camera), எல்இடி ப்ளாஷ் (LED flash) கொண்டுள்ளது. இதில் நைட் மோடு, பியூட்டி மற்றும் பெயின்டிங் மோடு என‌ புகைப்படங்களை அழகாக எடுக்க வழி செய்கின்றது. மேலும் இதில் ப்ரோ மோடு மூலம் ISO, shutter speed, focus, white balance, மற்றும் exposure போன்றவற்றையும் இயக்க முடியும். செல்ஃபி (selfie) எடுக்க ஏதுவாக 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா (8MP wide angl camera) வழங்கப்பட்டுள்ளது.


06

கைரேகை ஸ்கேனர் (fingerprint scanner)

ஹானர் 5சி கருவியின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக‌ கைரேகை ஸ்கேனர் (fingerprint scanner) வழங்கப்பட்டுள்ளது.

07

மார்ஷ்மேலோ (marshmallow)

ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மல்லோ (Android 6 marshmallow) இயங்குதளம். இன்று வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் மார்ஷ்மல்லோ இயங்குதளம் வெகு சில கருவிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் 5சி கருவியில் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் பெற முடியும்.

நாள் : 29.06.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE