Google-pixel-mobile-phones
Gears

Google Pixel phone features explained

கூகுள் தயாரித்த‌ முதல் போன் (Google made first phone)

கூகுள் நிறுவனம் முதன்முதலாக‌ தானாகவே வடிவமைத்து, தயாரித்த முதல் போன் கூகுள் பிக்ஸல் போன் (Google Pixel phone). கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை (Android OS) வழங்குவதால் பலருக்கும் குழப்பமாக‌ தோன்றும் விஷயம், கூகுள் ஒஸ் அல்லவா வழங்குகிறது. ஹேண்ட்செட் எப்படி தயாரித்திருக்கும். ஆம். கூகுள்தான் ஹேண்ட்செட்டினையும் (Mobile handset designed by Google for Pixel phones)வடிவமைத்து தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தைப் முற்றிலுமாக தானாகவே தயாரித்து ஃபோன்களை / உபகரண‌ங்களை (phones and accessories) வழங்குவதைப் போல், கூகுளும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் (Google with android OS) கொண்டு இயங்கும் மிகச் சிறந்த ஃபிளாக்ஷிப் போன்களை (Flagship phones) உருவாக்கும் நோக்கில் வெளியிடப்ப‌ட்ட கருவிகள் தான் இந்த‌ கூகுள் பிக்ஸல் ஃபோன்கள் என‌ இணையதள‌ அறிக்கைகள் கூறுகின்றன‌.

கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant)

கூகுள் தனது கூகுள் அசிஸ்டண்ட் அம்சத்தினை பிக்ஸல் கருவிகளில் தான் முதன் முதலில் வழங்கியுள்ளது. போனில் ஊட்டப்பெற்ற‌ கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் குரல் மூலம் (பேசி தேடல் செய்யலாம் ) இயக்கக்கூடிய தேடு பொறி சேவை ஆகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் (Artificial Intelligence) சார்ந்து வேலை செய்கின்றது. வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வழங்கி வருகின்றன‌ என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு

இதுவரையிலும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட‌ புதிய ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இணையம் மற்றும் சமூக‌ தளங்கள் முழுக்க பயனர்கள் நல்ல விமர்சனங்களை (Google Phone reviews) வழங்கியுள்ளனர். தொழில்நுட்ப சந்தையிலும் இந்தக் கருவிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய‌ ஐபோன் ஃபோன்களில் (iPhones) ஹெட்போன் ஜாக் (Headphone jacks) ஆப்ஷனினை நீக்கி வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. இதனால் ஆப்பிள் அதன் பயனர்களை கூடுதல் கட்டணம் செலுத்தி இயர்பாட்ஸ் ஹெட்ஃபோன்களை (Earpods wireless-bluetooth headphones) வாங்க செய்து வருமானத்தினை கூட்டிக்கொண்டது. ஆனால் கூகுள் அப்படி செய்யாமல் வழக்கமான 3.5 எம்எம் ஹெட்போன் (Google's usual 3.5mm headphone jack for pixel phones) ஜாக்கை வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் உலகில் கிடைக்கும் எவ்வித 3.5 எம்எம் ஹெட்போன்களிலும் இசையை அல்லது வாய்ஸ் கால்களை பிக்ஸல் போனில் அனுபவிக்க முடியும்.

அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரேஜ்

கூகுள் தனது பிக்ஸல் போன்களில் கிளவுட் ஸ்டோரேஜ் (unlimited cloud storage for pixel phone users) முறையை கையாண்டுள்ளது. எனவே மெமரி குறித்து பயனர்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. பயனர்கள் தங்களது தரவுகளை (டேட்டாக்களை) கிளவுடில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப்பினில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட பின்னரே குறைந்த ரெசல்யூஷனாக‌ (low resolution pictures) படம் சேமிக்கப்படும். இப்படங்களை பெரிய திரையில் / பெரிதாக்கி பார்க்கும் (zoomed or real high resolution images) போது புகைப்படமானது தரம் குறைவாக காணப்படும். கூகுள் பிக்ஸல் போன்களில் இந்த‌ பிரச்சினை இல்லாமல் நீங்கள் எந்த‌ படத்தினை சேமித்தீர்களோ அதே துல்லியத்துடன் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அன்-லிமிட்டெட் கிளவுட் மூலம் அதிக தரத்தில் (ரெசலூஷனில்) சேமித்துக் கொள்ள முடியும்

வாட்டர் ரெசிஸ்டண்ட்

நாம் வாங்கிக்கொள்ளும் ம‌ற்ற ஸ்மார்ட்போன்களில் வருகின்ற‌ குறிபிட்ட‌ அம்சமான‌ வாட்டர் ரெசிஸ்டண்ட் (water resistant google pixel phones) ஆப்ஷன் கூகுள் பிக்ஸல் போன்களில் காணப்படவில்லை. இதனால் கூகுள் பிக்ஸல் கருவிகளை பாதுகாக்க நாம் வேறு வழிகளை நாட‌ வேண்டும்.

நிறம்

குயட் பிளாக் மற்றும் வெரி சில்வர் நிறங்களில் (Quite Black or Very Silver) கூகுள் பிக்ஸல் போன்கள் வெளியாகியுள்ளன‌.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE