உங்கள் கைபேசி திருடப்பட்டுவிட்டால் என்னாகும் ?? கைபேசி திருடனை வேவு பார்க்கும் குறும்படம்

Is your mobile phone stolen by someone? A Dutch filmmaker spied on a thief to find out

"Find My Phone" ( தமிழில் : எனது கைபேசியை தேடுதல் ) என்பது ஒரு திருடப்பட்ட‌ செல்ஃபோன் பற்றிய‌ ஒரு அற்புதமான‌ குறும்படம். ஒருவேளை கைபேசி திருட்டால் பாதிக்கப்பட்டவர் நீங்களாக‌ இருந்தால், அல்லது உங்களுக்கு தெரிந்தவர் ஒருவராக‌ இருந்தால், மற்றும் தொலைவிலிருந்து மெம்மரி அழித்தல் அம்சம் (activate a remote wipe feature) செயல்படுத்தப்படுமானால் என்னவாகும்?.

"Find My Phone" திரைப்பட தயாரிப்பாளர், அந்தோணி வான் டெர் மீர் (Anthony van der Meer), செரிபஸ் எனும் ஆண்ட்ராய்டுக்கான‌ திருட்டு எதிர்ப்பு தீர்வு தரும் ஆப் (Cerebus, Anti-theft solution
for Android) இன்ஸ்டால் செய்யப்பட்ட‌ அண்ட்ராய்டு செல்போனை சூழ்ச்சியாகக் கையாண்டு, முழு மெமரி அழித்தலை தாக்குபிடிக்கும் ஒரு கமாண்ட் அன்ட் கண்ட்ரோல் அமைப்பு (command-and-control system for Android) முறைகளையும் அற்புத காட்சியாக்கி உள்ளார்.

Find My Phone Documentary கதைச் சுருக்கம்

வான் டெர் மீர் கைபேசி திருடப்பட்ட பிறகு, அவருடைய தனிப்பட்ட தரவுகளை (personal data) திருடன் பெற‌ முடிகின்றது. எனவே அத்திருடனால் இரண்டாவது கைபேசி ஒன்றினை திருட வைக்க‌ வேண்டுமென்பதற்காக‌ ஒரு சிக்கலான திட்டம் ஒன்றினை செயல்படுத்தத் தூண்டுகிறது.

இச்சமயம், வான் டெர் மீர், தனது செல்போனில் முழு மெமரி கிளீன் செய்தபின்பும் அழிந்துபோகாமல் செயல்படும் ஒரு இரகசிய பயன்பாடு ஒன்றினை சேர்த்திருந்தார். இந்த‌ இரகசிய‌ ஆப் மூலம் போன் இருக்கும் இடம், பார்க்கப்பட்ட‌ ஃபைல்கள் (அணுகப்பட்ட‌ கோப்புகள்) கண்காணித்து, இரகசிய‌ ஃபோட்டோ எடுத்தல் மற்றும் ஆடியோ பதிவு கூட எடுத்துக்கொள்ள‌ முடியும்.

இதனால் அவருக்கு தனது ஃபோனைத் திருடிய நபரின் வாழ்க்கை, தனிப்பட்ட அணுகல் விபரங்களைப் பெற்றுக்கொள்ள‌ முடிகின்றது.

மேலே உள்ள‌ 20 நிமிட ஆவணப்படத்தை பாருங்கள், மற்றும் வீடியோ எழுப்பிய கேள்விகள் சிலவற்றிற்கான‌ பதில்களும் உங்களது சந்தேகங்களையும் இந்த யூடியூப் கேள்வி பதில் பக்கத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாள் : 20.12.2016 திருத்தம் : 20.12.2016

புதியவை / Recent Articles

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE