BSNL Office
கைபேசி

BSNL will soon provide a plan with unlimited local and national voice calls to all other networks for just Rs 149 a month

இந்திய‌ அரசிற்குச் சொந்தமான தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் பி.எஸ்.என்.எல், மாத்திற்கு ரூ 149 மட்டுமே செலுத்தி, அனைத்து நெட்வொர்க்குடனான‌ கால்களுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்பு திட்டத்தினை வாடிக்கையாளர்களுக்கு விரைவினில் வழங்க உள்ளது.

இந்த மாதக் கட்டணம் திட்டம், , 300 எம்பி டேட்டவுடன் ஜனவரி 1, 2017 அன்று அறிமுகமாகின்றது. இந்த‌ திட்டத்துடன் பிஎஸ்என்எல் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட தயாராக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் Jio ரூ 149-திட்டம், 28 நாட்களுக்கு, வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 எம்பி டேட்டா மற்றும் 100 உள்ளூர் மற்றும் தேசிய SMSes அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 5 ம் தேதி, ஜியோவின் வரவினையடுத்து மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வரம்பற்ற குரல் அழைப்பினை வழங்கி வருகின்றன‌.

எனினும், பிஎஸ்என்எல் மட்டுமே ஒரு செலவு குறைந்த கட்டண திட்டத்தினைக்கொண்டு வரம்பற்ற குரல் அழைப்புக்களை ஜியோவினைத் தொடர்ந்து வழங்க‌ உள்ள‌ தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.

ரிலையன்ஸ்,அதன் 'வெல்கம் ஆஃபர்' கீழ் வழங்கி வந்த‌ இலவச குரல் அழைப்பு மற்றும் டேட்டா திட்டமானது இப்போது மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE