Apple's Flexible iPhone Model, TYpical
Gears

Apple wins patent for foldable flexible iPhone

ஆப்பிள் நிறுவனம் தனது வளையும் தன்மை கொண்ட ஐபோனுக்கு காப்புரிமை (patent Application for apple's flexible iphone) கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஆப்பிள் நிறுவனம் இதற்காக‌ 2013, 2014 ஆண்டுகளில் விண்ணப்பங்களை ஐரோப்பாவில் வின்ணப்பித்திருந்தது. இரண்டு முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விஷயமானது இப்போது ஆப்பிளுக்கு சாத்தியமாகியுள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த‌ காப்புரிமைகளைப்பெற்று வெற்றியும் கண்டுள்ளது. மேம்பட்ட கார்பன் நானோ கட்டமைப்புகள் (Advanced Carbon Nanotube Structures) பயன்படுத்தி எதிர்காலத்திற்கான‌ நெகிழ்வு அல்லது மடிந்துகொள்ளும் ஐபோன் (Flexible/Fold-able iPhone) வடிவமைத்தலில் காப்புரிமம் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் வளையும் தன்மை கொண்ட கைப்பேசி தயாரித்தல் தொடர்பான ஆராய்ச்சியில் (Apple's research on developing a foldable iPhone) ஈடுபட்டு வருகிறது. என்றாலும், ஆப்பிள் அந்த கைப்பேசியை வடிவமைத்து பொது விற்பனைக்கு கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டி வந்தது.

ஆப்பிள் தனது பெயரில் இதற்கான‌ காப்புரிமையை விண்ணப்பித்திருப்பதாக‌ இதற்கு முன் ஒருபோதும் வெளியிட்டதில்லை.

ஆப்பிள், கண்டறிதலை தவிர்ப்பதற்காக‌ த‌னது பெயரின் கீழ் விண்ணப்பிக்காமல் தங்கள் பொறியாளர் பெயர்களில் விண்ணப்பித்து அதை ரகசியமாக வைத்திருக்க கூடும் என‌ பேட்டன்ட்லீ ஆப்பிள் கூறுகின்றது.

ஆப்பிள் 2018 இல் ஒரு நெகிழ்வான வளைந்த திரையுடைய‌ ஒரு ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக‌ ஏற்கனவே அறிவித்திருந்தது. இது நிஜமாகும் விதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமம் வெற்றியும் அமைந்துள்ளது.

2018ல் ஆப்பிள் கைபேசிகளில், தற்போது ஆப்பிள் வாட்ச் (Apple watch screen) திரையில் பயன்படுத்தப்படும் ஓல்இடி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட‌ (iPhones based on OLED technology) ஃபோன்களை அறுமுகப்படுத்த‌ உள்ளதாக‌ அறிவித்திருந்தது. ஓல்இடி கைபேசிகள் (OLED iPhones) தற்போதைய ஐபோன் திரைகளை விட வெளிச்சமாக மற்றும் நிறங்கள் உடையதாகவும் இருக்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகப்படுத்தி பத்தாவது வருடம் துவங்கியுள்ள‌ நிலையில் இதனைக் கொண்டாடும் நாளை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் வளையும் தன்மை கொண்ட கைப்பேசி விரைவில் விற்பனைக்கு வரும் என எதிப்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் முதல் நெகிழ்வான ஐபோன் (Apple's first flexible iPhone), 2018 இல் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அறிக்கைகள் உள்ளன‌. ஆப்பிளின் மேல்மட்ட‌ டிஸ்பிளே வழங்குநர்கள் (OLED suppliers for Applee's iPhone) இதற்கான‌ வேலையில் இறங்கியுள்ளனர்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE