Nanite Micro Android Smartphone
Gadgets

Nanite Micro Android Smartphone from Ghost Technologies

கூகுள், ஆப்பிள் மற்றும் உங்களின் விரும்பமான‌ ஸ்மார்ட் ஃபோன்களின் வரம்பில் ஒரு சின்னஞ்சிறிய ஸ்மார்ட் கைபேசியும் சேரவுள்ளது. கோஸ்ட் டெக்னாலஜிஸ் ( Ghost Technologies ) உருவாக்கிய புதிய நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போன் (Nanite smartphone) 1.8 அங்குல உயரம் கொண்டதாகும்.

அண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியினை Android மற்றும் iOS சாதனங்களுடனும் இணைத்து ஏனைய‌ கைபேசிகளைப் போல‌ உலகில் எங்கு வேண்டுமானாலும் அழைக்கவும், செய்திகளை அனுப்பவும் முடிகின்ற‌ தனித்த திறனோடு விளங்குகின்றது. இதில் SIM உட்பட microSD கார்ட் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள நானிட் கைப்பேசியானது வரும் நவ‌ம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஆரம்ப‌ விலை 99 கனடா டாலர்கள் (CAD $99) ஆகும்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE