வெளியிட்ட தேதி : 14.12.2013
கைபேசி

Types of Sim Card

மொபைல் போன்கள் உலகில், ஜிஎஸ்எம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ (CDMA) என்று இரண்டு முக்கிய கைபேசி வகைகள் உள்ளன. இதில் ஜிஎஸ்எம் போன்கள் சிம் அட்டைகளைப் பயன்படுத்துகின்றன‌. சிடிஎம்ஏ போன்கள் சிம் அட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

ஜிஎஸ்எம் கைபேசிகளை இயக்க‌ சிம் அட்டைகள் முதலில் கைபேசியில் சொருகப்பட வேண்டும். ஒரு சிம் அட்டை இல்லாமல், ஒரு ஜிஎஸ்எம் மொபைல் நெட்வொர்க்கின் உள்ளே நுழைய‌ முடியாது. சிம் அட்டை முக்கியமான தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய‌து ஆகும்.

சிடிஎம்ஏ கைபேசிகள் இஎஸ்என் (எலக்ட்ரானிக் சீரியல் எண்) மூலம் கண்காணிக்கப்படும் அதனால் சிம் அட்டைகள் தேவையில்லை. ஒருமுறை செயல்படுத்தப்பட்டுவிட்டால், ஒரு சிடிஎம்ஏ கைபேசி குறிப்பிட்ட சிடிஎம்ஏ கேரியரின் நெட்வொர்க்கின் உள் நேரடியாக இணைக்கப்பட்டுவிடும். இந்தியாவில் Tata Indicom, Reliance Communications, Rainbow என‌ சிடிஎம்ஏ சேவைகள் உள்ளன‌.

சிம்கார்டுகள் எப்படி வேலை செய்கின்றன‌

சிம் அட்டை என்ன மாதிரியான தகவல் சேமிக்கிறது தெரியுமா. மிக முக்கியமான dataவாக‌ IMSI (சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம்) மற்றும் IMSI உறுதிப்படுத்தும் authentication key ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த அங்கீகரிப்பு கீயை உங்களின் ஃபோன் கேரியர் வழங்குகிறது.

ஒரு கைபேசி ஆன் செய்யப்பட்டதும் சிம் கார்டிலிருந்து IMSI ஐ பெற்றுக்கொள்ளும், பின் அதனை நெட்வொர்க்குக்கு (பிணையத்திற்கு) அனுப்பி "அனுமதி கோரிக்கை" விடுக்கும். நெட்வொர்க் IMSI பெற்றுக்கொண்டு, அதற்கான‌ அங்கீகரிப்பு கீ யைச் சார்ந்த‌ அகத் தகவல்களை சரிபார்த்து கொள்ளும். இப்போது நெட்வொர்க் 'A' என்ற‌ சீரற்ற‌ எண் ஒன்றினை உருவாக்கி authentication key மூலம் உள் அனுப்பி B என்ற‌ புது எண்ணை உருவாக்கும். அனுமதி கோரும் SIM கார்டு முறையானதா என‌ சரிபார்த்துக் கொள்கின்றது.

கைபேசி A என்ற‌ எண்ணை நெட்வொர்க்கிலிருந்து பெற்றுக்கொண்டு சிம் கார்டுக்கு அனுப்பி அதற்குச் சொந்தமான‌ அங்கீகரிப்பு கீயின் மூலம் உள்நுழைந்து C என்ற‌ என்ணை உருவாக்கும். இந்த‌ எண் நெட்வொர்க்குக்கு திரும்ப‌ அனுப்பப்படுகிறது.

நெட்வொர்க் எண்ணான‌ 'A' , சிம் கார்டு எண்ணான‌ 'C' ஆகிய‌ இரண்டும் ஒன்றுபட்டிருந்தால் சிம் கார்டு முறையானது என்று அனுமதியளிக்கப்படுகிறது.

இதனால்தான், சிம் கார்டுகள் மிக‌ வசதியானவையாக‌, கைபேசிகளை மாற்றம் செய்து உபயோகம் செய்ய‌ அனுமதிக்கிறது. உங்களின் சந்தாதார‌ தகவல்கள் அனைத்தும் சிம்கார்டில் இருப்பதால் ஒரே சிம்கார்டினை வெவ்வேறு கைபேசியில் மாற்றம் செய்து உபயோகிக்கலாம்.

ஆனால் சிடிஎம்ஏ கைபேசிகளை மாற்று உபயோகம் செய்ய‌ முடியாது. ஏனெனில் சிடிஎம்ஏ கைபேசிதான‌ நெட்வொர்க்ககில் இணைக்கப்படும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.