வெளியிட்ட தேதி : 09.02.2017
Youtube-Live-streaming-mobile-live
Gadgets

YouTube live streaming feature is now live for users with over 10k subscribers

யூட்யூப் (YouTube) குறைந்தபட்சம் 10,000 சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்காக‌ மொபைல் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக‌ யூட்யூப் ஏப்பில் ஒரு நேரலை ஒளிபரப்பு தொடங்குவதற்கான‌ ஒரு 'பெரிய சிவப்பு' பொத்தான் படம்பிடிப்பதற்கென‌ காணப்படுகிறது.

YouTube இன் வழக்கமான‌ அம்சங்களான‌ தேடலில் கண்டறிந்த‌ பரிந்துரைகள் மற்றும் பிளேலிஸ்ட்கள் என‌ இந்த‌ லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் வீடியோக்களைப் பார்க்க முடியும். மற்றும் யார் யார் இந்த‌ லைவ் வீடியோவைப் பார்க்க‌ முடியும் என்பத்ற்கான‌ அனுமதியை அமைக்கவும் முடியும்.

கூஃகுள் நிறுவனம் லை ஸ்ட்ரீமர்கள் பணம் பெற ஏதுவாக‌ ( let live streamers monetize ) இந்தியா உட்பட 20 நாடுகளில் 'சூப்பர் சேட் (அரட்டை)' ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக், பெரிஸ்கோப் மற்றும் மீர்க்கட்ஸ் (meerkats) போன்ற‌ மற்ற லைவ் ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒப்பிடும்போது, YouTube இன் பயன்பாடானது முன்னணியாக‌ நிற்பதோடு பயனர்களை லைவ் ஸ்டீரிமிங் வீடியோக்களை தேட அனுமதிக்கிறது. பெரிஸ்கோப் மற்றும் மீர்க்கட்ஸ் இன் குறைபாடு - பயனர்கள் லைவ் வீடியோக்களை சேமிக்க அனுமதிப்பது இல்லை.

மறுபுறம், பேஸ்புக் மற்றும் யூட்யூப், லைவ் வீடியோக்களை பின்னர் பார்க்க வசதியாக‌, வீடியோக்களைச் சேமித்து ஆவணப் படுத்தவும் செய்கின்றது (can archive the videos which can be viewed later).

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.