வெளியிட்ட தேதி : 31.01.2017
Whatsapp Location Tracker
Gadgets

WhatsApp's adds an update, lets you to track your friends' locations

வாட்ஸ்அப் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. உடனடி செய்தியிடல் பயன்பாடான‌ வாட்ஸ்அப்பின் (Instant messaging app WhatsApp) புதிய‌ அப்டேட் பயன்படுத்தி , நிகழ்நேரத்தில் பயனர்களின் நண்பர்கள் இருக்கும் இடத்தைக் காண்பிக்க‌ அனுமதிக்கும். மற்றும் நேரடியாக‌ பயனர்களின் நிகழ்னேர‌ இடத்தினையும் கண்காணித்துக்கொள்ளவும் செய்யும்.

வாட்ஸ்அப் மேம்படுத்தல்கள் தொடர்பான தகவல் கசிவுக்கென‌ அறியப்படும் WABetaInfo ட்விட்டர் கணக்கின் (WABetaInfo account on Twitter) செய்திபடி, இந்த‌ அம்சம் வாட்ஸ் அப்பின் பீட்டா பதிப்புக்களான‌ (WhatsApp beta version), iOS இன் 2.17.3.28 மற்றும் அண்ட்ராய்டு பதிப்பான‌ 2.16.399+ லும் வேலை செய்யும். ஆனால் இயல்பு நிலையில் இவ்வசதி முடக்கப்பட்டிருக்கும் (disabled by default).

இருப்பிட‌ கண்காணிப்பானது (location tracking) 1 நிமிடம், 2 நிமிடங்கள், 5 நிமிடங்கள் அல்லது நிரந்தரமாகவோ என‌ வைத்துக்கொள்ள‌ முடியும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் நேரத்தில் ஒரு குழுவாக‌ (கூட்டமாக‌ / கும்பலாக‌) சந்திக்க வேண்டும் என்றால் இந்த வ‌சதி எளிதாக்கும். மேலும் உங்கள் கூட்டத்தில் இருக்கும் நபர்கள் (group members) எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் எனபதையும் கண்காணிக்க‌ உதவும் எனத் தெரிய‌ வருகின்றது.

நீங்கள் எந்த நேரத்திலும் எங்கே உள்ளீர்கள் என‌ உங்கள் குழு உறுப்பினர்கள் அறிய முடியாத்படி லைவ் ஸ்ட்ரீமிங் வசதியை முடக்கிக் கொள்ளவும் செய்யலாம் (disable). "நிகழ்நேர‌ இடம் கண்காணிப்பு" வசதியை செயல்படுத்த‌ வேண்டுமானால் (to activate "Live Location Tracking") நீங்கள் அதற்கான‌ அனுமதியை அளித்தால் மட்டுமே இயங்கும். இயல்புநிலையில், முடக்கப்பட்டு இருக்கும்.

கடந்த வாரம் தான் வாட்ஸ் அதன் IOS பதிப்பில், இன்டர்நெட் சிக்னல் சரியாக இல்லாத இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் டைப் செய்து Queue வரிசையில் வைத்து, பின்னர் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வாட்ஸ்அப் இந்தியாவில் வீடியோ அழைப்பு அம்சத்தினை துவங்கியது மற்றும் இவ்வசதி மற்ற நாடுகளிலும் அறிமுகம் ஆகியுள்ளது. Android, iOS மற்றும் விண்டோஸ் என‌ அனைத்து தளங்களிலும் இந்த‌ அம்சம் இயங்கி வருகிறது.

இந்தியாவில் 160 மில்லியன் பயனர்கள் பெற்ற‌ வாட்ஸ்அப், உலகம் முழுவதுமாக‌ 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.