வெளியிட்ட தேதி : 25.10.2016
Whatsapp Video calling beta version
Gadgets

The new WhatsApp video calling feature in the beta version of WhatsApp App

வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறை ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் இயங்குதளங்களுக்கான‌ பீட்டா வெர்சன்கள் வெளியாகியுள்ளன‌. விரைவில் பொது உபயோகத்திற்கான‌ வெர்சன் (public version) ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படும்.

வாட்ஸ்அப் பயன்பாட்டின் புதிய பீட்டா பதிப்பில் - WhatsApp-2-16-318-release (WhatsApp Android) இப்பொழுது அனைவரும் எதிர்பார்த்த‌ முக்கிய அம்சமான‌ வீடியோ அழைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் கான்டாக்ஸ் லிஸ்டில் (WhatsApp contacts list) இருந்து ஒரு எண்ணை தேர்வு செய்து அழைப்பு பொத்தானை தட்டி 'வீடியோ அழைப்பு' (video call) என‌ எளிதில் வீடியோ காலிங்கை செய்ய‌ முடியும். இந்த‌ வசதியினை பயன்படுத்த‌ நீங்கள் அழைக்கும் நபரின் கைபேசியில் வீடியோ கால் அம்சம் ஆதரிக்கும் WhatsApp பதிப்பு (whether updated to new version of whatsapp) உள்ளது என்றால், ஒரு ஃபேஸ்டைம் போன்ற காலை (Face-time Call) செயல்படுத்தும்; இல்லை என்றால், நீங்கள் தொடர்பு கொண்டவரின் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அறிவிப்பினை விடுக்கும்.

நீங்கள் அழைப்பு செய்ய‌ பட்டனை அழுத்தும்போது இப்போது இரண்டு ஆப்ஷன்கள் (Two Options for calling thru WhatsApp) தோன்றும். 01. வாய்ஸ் கால் (Voice call ) 02. வீடியோ கால் ( Video call).

வாட்ஸ்அப் நெட்வொர்க் ஏற்கனவே ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது, ஆகையால் WhatsApp திறம்பட இந்த‌ வசதியான‌ வீடியோ அழைப்பை, வெகுவிரைவில் பீட்டா வெர்ஷனில் இருந்து பொது பயன் வெர்ஷனுக்கும் அப்டேட் செய்துகொள்ளும். ஃபேஸ்புக்கின் இந்த‌ நீக்கமானது, கூகிள் டுயோ, வீடியோ கால் மாத்திரமே எனும் ஒற்றை நோக்க பயன்பாட்டிற்கு சவால் விடும் வகையில் உள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் என்றால் என்ன‌ ?

பொதுவாக‌ பீட்டா வெர்ஷன் என்பது ஒரு மென்பொருள் அல்லது அதன் மாட்யூள் (நீட்சி) வெளியாவதற்கு முன்னரே அதனை சோதனக்காக‌ வெளியிடுவதாகும் . குறிப்பிட்ட‌ எண்ணிக்கையிலான‌ பயனர்கள், டெவலப்பர்களுக்கான‌ பதிப்பாகும். இச்சோதனையில் பிழை / பக்ஸ் இருந்தால் இவர்கள் எதுத்துச் சொல்வார்கள். பொது பயன்பாட்டிற்கான‌ பதிப்பு இந்த‌ பீட்டா / ஆல்ஃபா வெர்ஷன்களுக்கு பிறகே அறிவிக்கப்படும்.

எளிமையான‌ வீடியோ அழைப்பு பயனர் இடைமுகம் ( video calling UI) : கீழே மூன்று விருப்பங்கள், கேமரா மாற்றும் பட்டன், ஒரு உரை செய்தியை அனுப்பும் பட்டன் மற்றும் அழைப்பினை மியூட் செய்யும் பட்டன். நீங்கள் அழைப்புக்கு பதில் அளிக்காமல் இருந்தால், அழைப்பினை ரத்து செய் அல்லது மீண்டும் அழை அல்லது குரல் செய்தி பதிவு செய்வதற்கான் ஆப்ஷன்கள் தோன்றும்.

உங்களுக்கு வாட்ஸ்அப் அண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனை சோதனைச் செய்ய‌ வேண்டுமா?. இந்த‌ இணையதளத்திற்குச் சென்று டவுண்லோடு செய்யுங்கள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.