Automobiles

UBERPool Car-Pooling Service to be introduced in Bangaluru

ஆதாரம்

உபேர் (Uber) நிறுவனம் வரும் வாரங்களில் தனது கார்-பூலிங் தயாரிப்பான‌ UberPOOL பீட்டா -வினை பெங்களூரில் தொடங்க உள்ளது என்று அறிவித்துள்ளது. முன்னதாக‌ சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரம், பாஸ்டன், ஆஸ்டின் மற்றும் பாரிஸ் நகரங்களில் இந்த‌ பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டு சில‌ மாதங்களாக‌ சேவையில் உள்ளது.

விலைப்பட்டியல் எதுவும் வெளியிடப்படாத‌ நிலையில் 50% அல்லது அதற்கு மேல் காசுசேமிப்பினை இந்த‌ சேவையால் வழங்க‌ சாத்தியம் உள்ளது என‌ உபேர்(Uber) கூறுகிறது.

உபேர்பூல் சேவையினை தெரிவுசெய்து ஒரே பாதையினைக்கொண்டு (வழியாக‌ மற்றொரு இடத்தினை அடைய‌ ) சவாரியைப் பகிர்ந்துகொள்ளும் பயனர்கள் காசினை பிரித்து வழங்குவதால் அதிக‌ காசினை சேமித்துக்கொள்ள‌ முடியும். மேலும் போக்குவரத்து நெரிசலையும் இச்சேவையினைப் பின்பற்றினால் ஒருவாறு கட்டுப்படுத்த‌ முடியும் என‌ எதிர்பார்க்கப்படுகிற‌து.

பெங்களூரூவில் ஆரம்பிக்கப்படும் இந்த‌ UberPOOL பின்னர் இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் இதர‌ நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என‌ உபேர் கூறியுள்ளது. UberPOOL டிரைவர்கள் (ஓட்டுநர்), Uberரை விட‌ 10-15% அதிகமாக‌ பெற்றுக்கொள்ள‌ முடியும் என்றும் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடத்தினை ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டால் அதனை பயனர்கள் மாற்றம் செய்துகொள்ள‌ முடியாது எனவும் அறியப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.