வெளியிட்ட தேதி : 04.11.2016
WhatsApp stops its service for non-updated or old OS
Gadgets

WhatsApp stops its service for non-updated or old OS using smartphones and won't run WhatsApp on them after Dec 31,2016

கவனம்!. இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 31 ற்கு பிறகு வாட்ஸ் அப்பை (WhatsApp) செயல்படுத்த‌ இயலாது (These phones won't run WhatsApp). உங்களுக்கு சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Symbian Operating System) ஞாபகம் இருக்கிறதா? ஆம், நோக்கியா (Nokia), பிளேக்பெரி (BlackBerry), மற்றும் சில‌ விண்டோஸ் கைபேசிகள் (few of the Windows) போன்ற‌ உயர்தர‌ கைபேசிகள் மற்றும் நோக்கியாவின் அனைத்து N தொடர் செல்போன்களும் அதே OS பயன்படுத்துப‌வை ஆகும். அதன் பின்னர் வந்த நோக்கியா N8 (Nokia N8 series) தொடர் ஸ்மார்ட்போன்களும் (ப‌ல‌) சிம்பியன் ஓஎஸ் பயன்படுத்தியவையே. எனினும், நீங்கள் இன்னமும் சிம்பியன்-ஓஎஸ் மூலம் இயங்கும் ஒரு போன் (கைபேசி) பயன்படுத்தினால், நீங்கள் டிசம்பர் 31க்கு பிறகு வாட்ஸ் அப் யினை பயன்படுத்த‌ முடியாது.

அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 இயங்கும் கைபேசிகளும் இதற்கு இலக்காகும். 31 டிசம்பர் முதல் சில வகை இயங்குதளம் பயன்படுத்தும் (ஓஎஸ்) போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடையாது என் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரபூர்வ‌ அறிக்கையில், Symbian Operating System கொண்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் இதர‌ செல்போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது.

வாட்ஸ்அப் நிறுவனம், டிசம்பர் 31, 2016க்கு பிறகு இந்த கைபேசிகளில் தனது ஆதரவுதனை நிறுத்திக்கொள்ளும்.

- பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10 பயன்படுத்தும் கைபேசிகள்

- நோக்கியா S40 பயன்படுத்தும் கைபேசிகள்

- நோக்கியா S60 பயன்படுத்தும் கைபேசிகள்

- அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 பயன்படுத்தும் கைபேசிகள்

- விண்டோஸ் 7.1 பயன்படுத்தும் கைபேசிகள்

- ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐபோன்கள் 6 iOS பயன்படுத்தும் கைபேசிகள்

- நோக்கியா நீண்ட காலம் கைபேசிகள் தயாரிப்பினை நிறுத்தி விட்டதனால், பரவலாக இன்னும் நோக்கியா E6, நோக்கியா 5233, நோக்கியா C5 03, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 கருவிகளில் பயன்படுத்தப்படுகின்ற சிம்பியன் இயக்கதளத்தினில் இச்சேவை நிறுத்தப்படும்.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான‌ வாட்ஸ் (Facebook owned WhatsApp) அப் நிறுவனம், டிசம்பர் 31, 2016ம் வருடத்திற்கு பிறகு, பழைய‌ ஓஎஸ் நுட்பத்தால் (Old Os technology) கையாலாகாத‌ பழைய கைபேசிகளில் தனது ஆதரவினை நிறுத்திக் கொள்ளும். தொழில்நுட்ப வசதி மேம்படுத்தாத‌ கைபேசிகளைக் கொண்டதால் நீங்கள் வாட்ஸ் அப்பினை பயனபடுத்த‌ இயலாது. புது கைபேசியினை வாங்கி நவீன‌, முன்னேற்றம் பெற்ற‌ உலகினைக் காணுங்கள்.( TECHNOLOGY BOSS, TECNOLOGY !!. )

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.