பெங்களூர்வாசிகள் இப்போது பெரிஸ்கோப் வழியாக குற்றங்களைத் தெரிவிக்க முடியும்

People from Bangaluru can now report crimes through Periscope

ஆதாரம் செய்தி பக்கம்

பெங்களூர் குடியிருப்பாளர்கள் இப்போது ட்விட்டரின் லைவ் ஸ்ட்ரீமிங் பெரிஸ்கோப் (Periscope) பயன்பாட்டை (Mobile App) பயன்படுத்தி குற்றங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களை மதியாது குதித்தோடும் வாகனங்களை வீடியோக்களாகவும் பதிவு செய்து காவல்துறைக்கு தெரிவிக்க‌ முடியும். போலீஸ் கட்டுப்பாட்டு அறை, குற்றம் நடைபெற்ற‌ இடத்தினை படப்பிடிப்பு செய்த‌ நபரின் வீடியோவினை வைத்து கண்டுபிடிக்கவும், வட்டார‌ காவல் நிலையத்திற்கு எச்சரிக்கை அனுப்பவும் இயலும் என்று அறிக்கை கூறுகிறது.

2015 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பெங்களூரு போக்குவரத்து துறை அதன் பப்ளிக் ஐ (Public Eye) வலைதளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளை வெளியிட்டதன் மூலம் போக்குவரத்து மீறல்கள் பற்றிய‌ குற்றங்களை பதிவு செய்ய‌ ஒரு முயற்சியை துவங்கியது. குடிமக்கள் வண்டியின் பதிவு எண், மீறல், இடம், மற்றும் மீறல் வகையினை இணைந்து, குற்றம் குறித்த‌ ஒரு படத்தை பதிவேற்றம் செய்ய‌ பெங்களூரு போக்குவரத்து துறையின் வலைதளம் மற்றும் மொபைல் பயன்பாடுளில் பொதுமக்கள் பூர்த்தி செய்ய‌ அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

நாள் : 15.07.2015 திருத்தம் : 27.07.2015

புதியவை / Recent Articles