லைவ் 360 டிகிரி வீடியோவை ட்விட்டரும் தொடங்குகிறது
நேரடி 360 டிகிரி முறையில் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும் ஒரு புதிய வசதியை ட்விட்டர் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. ட்விட்டர் இன் 360 டிகிரி வீடியோ அறிமுகமானது பேஸ்புக்கின் லைவ் வீடியோவுடனான ஒரு போட்டி நடவடிக்கை ஆகும். ட்விட்டர் செய்தி மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில், உடனடி செய்திகள் ஆகியவற்றை இதன்மூலம் ஒளிபரப்ப முயல்கிறது.
பரவலாக பேசப்படும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்தான "வீடியோக்கள் பேஸ்புக்கின் எதிர்காலம்" என நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் ட்விட்டரின் இந்த விரைவான செயலானது அரங்கேறியுள்ளது.
முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றாக வலம்வரும் ட்விட்டரின் புதிய வசதியினை பயன்படுத்தி 360 டிகிரி முறையில் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும் என ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் 360 டிகிரி முறையிலான வீடியோக்களை உடனுக்கு உடன் நேரடியாக பார்வையிடுவது மட்டுமன்றி எதிர்ச் செயலாற்று முறை (Interact) மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்.
ட்விட்டர் மற்றும் ட்விட்டருக்குச் சொந்தமான பெரிஸ்கோப் வழியாக அனைவரும் நேரடி 360 வீடியோக்களை பார்க்க முடியும் என்றாலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர்களுக்கு மட்டுமே பெரிஸ்கோப் வழியாக லைவ் 360 வீடியோ வழி நேரலைக்குச் செல்ல முடியும்.