கைபேசி

No Queues. Book local train tickets using Indian railways’ new app

Download @ Google Play store. கூஃகிள் பிலே ஸ்டோரில் டவும்லோடு செய்யுங்கள்.

ரயில்வே ( IRCTC ) தகவல் அமைப்புகள் மையம் (CRIS) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான‌ UTS என்ற காகிதமற்ற‌ டிக்கெட் வழங்கும் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பினை (Mobile App ) அறிமுகப்படுத்தியது. இதைப்பற்றி எக்ணாமிக்ஸ் டைம்ஸ் இணையதள‌த்தில் பார்க்கவும்.

இந்த‌ ஆப்பினை பயன்படுத்தி பயனர்கள் (பயணிகள்) தினமும் புறநகர் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை பதிவு செய்ய‌ உதவுகிறது. இந்த‌ வசதி சென்னை மற்றும் மும்பை நகரங்களில் மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த‌ ஆப்பினை ( Mobile App ) பயன்படுத்துவதால் ஒரு டிக்கெட் பதிவு செய்யும் பயனர், பயணச்சீட்டினை அச்சிட வேண்டியதில்லை, அதற்கு பதிலாக TTE அவர்களிடம் தங்களது ஸ்மார்ட்போனில் சேமித்த‌ மென்மையான நகலை காண்பிக்கலாம். UTS பயன்பாட்டை முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் புக்கிங் செய்யவும், டிக்கெட் ரத்து செய்யவும், தங்களைக் குறித்த‌ சுயவிவரத்தை அறிவிக்கவும், அடிக்கடி பயணம் செய்யும் தளங்கள் என‌ யாவும் மேலாண்மை செய்ய அனுமதிக்கிறது.

ரயில்வேயின்( IRCTC ன் ) UTS ஆப்பினை பயன்படுத்த‌ பயனர் முதலில் தங்களை பதிவு செய்து கொள்ள‌ வேண்டியது அவசியம். பதிவு செய்துகொள்ள‌, தங்களது கைபேசி எண் மற்றும் அரசு அடையாள‌ அட்டை ஒன்றினை தெரிவித்து உறுதிபடுத்திக் கொள்ள‌ வேண்டும்.

இப்போது, சென்னை மும்பை நகரங்கள் மட்டுமே பதிவு செய்யும் போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் காண்பிக்கப்படுகின்றன‌. ரயில்வேயின் UTS ஆப் ( Mobile App ) வெளியிடப்பட்ட‌ முதல் நாளில் 50,000 பதிவிறக்கம் பெற்றுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.