Google TEZ, UPI supported Digital Payments APP
Gadgets

Google Tez, a mobile payments app for India uses Audio QR to transfer money

பலவகையாகப் பேசப்பட்டு வந்த‌ கூகிள் தேஸ் (Google Tez) மொபைல் ஆப்பை (Mobile App) Google அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொபைல் ஃபோன் வழி கொடுப்பனவுகளை (Payments) செய்வதற்கு முற்றிலும் இலவசமான‌ பயன்பாடினை (Mobile App - Not a Digital Wallet : பணப்பை அல்ல‌) இதன்மூலம் கூஃகுள் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியுடன் வங்கிக் கணக்குகளை இணைத்து ஆன்லைனில் பொருட்கள் வாங்கவும் மற்றும் பணம் அனுப்புவதற்கும் பாதுகாப்பான‌ வகையில் பணப்பரிமாற்ற சேவையினை தருகின்றது.

குறிப்பாக‌ கூகிள் தேஸ் (Google Tez) இந்திய அரசின் ஆதரவுபெற்ற‌ யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface ‍/ UPI) மீது உருவாக்கப்ப‌ட்டதாகும். பயனர்களை தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் செலுத்துவதற்கு அனுமதிக்கிறது.

பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது டிஜிட்டல் பேமன்ட் (Digital Payments) ஐ ஆதரிக்கும் Google Tez எனும் இலவச‌ பணப்பைச் (மொபைல் ஆப்) சேவையையும் வழங்கியுள்ளது மக்களிடையே வரவேற்பினை பெற்று வருகின்றது. கூகிள் தேஸ் (Google Tez) தற்போது இந்தியாவில் மட்டும்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், தமிழ், மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பயன்படுத்தி பணபரிமாற்றத்தினை செய்ய‌ முடியும்.

கூகிள் தேஸ் (Google Tez) பயன்பாட்டில் இந்தியாவின் 55 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன‌. கூகிள் தேஸ் (Google Tez) சேவையினை பயன்படுத்தும் முறை பற்றி வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.