Google Play Music revamped
Gadgets

Google Play Music will now use machine learning to suggest music that you like.

கூஃகுளின் சமீபத்திய‌ தந்திரமான‌ பொறிகற்றல் பயன்படுத்தி கூஃகுளின் பிளே மியூசிக் பயன்பாடு, இப்போது பாடல்களைப் பரிந்துரைக்கின்றது (Google Play Music now suggest songs).

ஆன்லைனில் பல்வேறு பாடல்களை கேட்டும் மகிழ‌ கூஃகுள் புதிதாய் சீரமைக்கப்பட்ட கூஃகுள் பிளே மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூஃகிள் நிறுவனம், இசை துறையின் சமீபத்திய‌ கண்டுபிடிப்புக்களைக் கொண்டு பிளே மியூசிக் பயன்பாட்டினை மேம்படுத்தியும் உள்ளது.

கூஃகுளின் பிளே மியூசிக்கில் (Revamped Google Play Music) பாடல்களை பரிந்துரைக்க‌, பயனர்கள் எந்த‌ வகையான பாடல்ளைக் கேட்க‌ விரும்புகின்றன‌ர் எனத் தெரிந்துகொண்டு காலநிலைகளுக்கு ஏற்ப பாடல்களை இசைக்கும் பொறி கற்றல் செய்வழியையும் (machine learning algorithm) சேர்த்துள்ளது. இன்று சந்தையில் இருக்கும் மற்ற மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming) சேவைகள் விட புத்திசாலித்தனமான‌ வசதிகளையும் கூஃகிள் சேர்த்துள்ளது.

பயனர்கள் தனிப்பட்ட இசையை அணுக (To access Personalized music in Play Music Apps) தங்களது இடம், செயல்பாடு மற்றும் வானிலை போன்றவற்றை தெரிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

"நீங்கள் உடற்பயிற்சி செய்ய‌ ஜிம்மினுள் செல்லும்போது - வொர்க்அவுட்டை இசை; வானம் இளம்சிவப்பாக‌ மாறுகையில் - ஒரு சூரியன் மறையும் சவுண்ட் டிராக் (Sound Track); நூலகத்தில் நுழையும்போது அதற்கேற்ற‌ இசையினை மாற்றி பிளே செய்கின்றது." என கூகிளின் முன்னணி தயாரிப்பு மேலாளர் எலியாஸ் ரோமன் விளக்குகிறார்.

Google Play மியூசிக் ஆஃப்லைனில் வேலை செய்யும் (Google's Play music works Offline) . பிளே மியூசிக்கில் நீங்கள் சமீபத்தில் கேட்ட‌ பாடல்களைத் (recently listened music tracks) தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல‌ ஒரு ஆஃப்லைன் பட்டியலினை (Offline songs list) இன்டர்னெட் இல்லாத‌ சமயங்களில் ஏற்ப‌டுத்திக் கொள்ளும்.

மேலும், Google Play இன் ஹோம் ஸ்கிரீனில்ன் (Home Screen in Music App) நீங்கள் மிகவும் விரும்பிக் கேட்ட‌ பாடல்களைக் மேலே காட்ட சீரமைக்கப்பட்டுள்ளது.

கூஃகுளின் பிளே மியூசிக் சேவையானது உலகளவில் 62 நாடுகளில் கிடைக்கப்பெறும். இந்த‌ பயன்பாட்டை இணையத்தின் ஊடாகவும் ( Internet Web App ), Android, iOS ஆப்களிலும் பெறலாம்.